ஹன்சிகா ஒரு ஒன் டேக் நடிகை: ஹரி புகழாரம்

ஹன்சிகா முதன்முதலாக சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ள படம் சிங்கம் 2. ஹரி இயக்கியுள்ள இந்த படத்தில் அனுஷ்காவும் உள்ளார்.
இந்நிலையில் இந்த படம் குறித்து ஹரி கூறுகையில்,
சிங்கம் 2 படத்தில் ஹன்சிகாவுக்கு முக்கிய கதாபாத்திரம் அளித்துள்ளேன். இதற்கு முன்பு அவருடன் நான் பணியாற்றியதில்லை. ஆனால் அவரின் படங்கள் பலவற்றை பார்த்துள்ளேன். அவர் ஒரே டேக்கில் நடித்துவிடுவார். அதிசயமாகத் தான் பல டேக்குகள் எடுப்பார். என்ன வேண்டும் என்பதை கூறிவிட்டால் நொடிப் பொழுதில் அப்படியே நடிப்பார். சிங்கம் 2ம் பாகத்தில் புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த தயங்கினேன். ஆனால் அனைவரும் அருமையாக நடித்துள்ளனர்.
ஹன்சிகாவின் கதாபாத்திரம் மிகவும் நன்றாக வந்துள்ளது. அவரின் நடிப்பு ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications