ஹன்சிகா ஆபரேஷன் செய்துதான் உடம்பை குறைத்தாரா? சர்ச்சையை கிளப்பிய நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானி ஆபரேஷன் செய்துதான் உடம்பை குறைத்தார் என்று சர்ச்சையை கிளப்பிய இணையவாசிக்கு சரியான பதில் அடி கொடுத்துள்ளார்.
மாப்பிள்ளை படத்தில் அறிமுகமான ஹன்சிகா, உதயநிதி ஸ்டாலின், சுந்தர்.சி, சிம்பு, சித்தார்த் உள்ளிட்டவர்களின் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.
நடிகை ஹன்சிகா தற்போது பார்டனர், 105 மினிட்ஸ், ரவுடி பேபி உள்ளிட்ட தமிழ், தெலுங்கு என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

ஒல்லி பெல்லி: நடிகை ஹன்சிகா சினிமாவில் இரண்டாவது இன்னிங்சை தொடங்குவதற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து ஒல்லி பெல்லி இடையழகியாக மாறி உள்ளார். இதனால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது விதவிதாமான புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில்,ஜூன் 21ந் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோக செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு, உடற்பயிற்சி செய்வது அனைவருக்கும் மந்திரமாக இருக்கும் என்று பகிர்ந்து இருந்தார்.

சரியான பதிலடி: இந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசி ஒருவர், நடிகைகள் அனைவரும் ஆப்பரேஷன் மூலம் உடல் எடையை குறைத்துவிட்டு யோகா செய்து குறைத்தேன் என சொல்வார்கள் எனக் கமெண்ட் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவினைப் பார்த்து டென்ஷனான, ஹன்சிகா உடல் எடை குறைக்க நான் கடினமாக உடற்பயிற்சி செய்து இருக்கிறேன். அதில் யோகாவுக்கும் முக்கியப் பங்குண்டு. யோகா நேர்மறை எண்ணத்தைப் பரப்புவதையும் கற்றுக்கொடுக்கும். வெறுப்பை அல்ல என அந்த இணையவாசிக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு திருமணம்: ஹன்சிகா மோத்வானி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தனது நீண்ட நாள் நண்பர், தொழில் அதிபரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர் நடிகை காஜல் அகர்வாலைப் போல திருமணத்திற்கு பிறகும் சினிமாவை விட்டு விலகாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். ஹன்சிகா நடிப்பில் கடைசியாக மஹா திரைப்படம் வெளியானது. இப்படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்திற்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது.


Click it and Unblock the Notifications











