Just In
- 50 min ago
செம அதிர்ஷ்டம்.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் ஹீரோயின்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- 1 hr ago
பிரியா பவானி சங்கருக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவையில்லை.. நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
- 2 hrs ago
சட்டையை கழட்டி கவர்ச்சியில் ரகளை செய்யும் ஆத்மிகா!
- 2 hrs ago
லக்கி தான்.. அடுத்தடுத்து படங்கள்.. அசற வைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. டிரெண்டாகும் #Losliya
Don't Miss!
- Finance
வோடபோனின் சூப்பர் ஆஃபர்.. 50ஜிபி டேட்டா ப்ரீ.. ஜியோ, ஏர்டெல்லில் என்ன சலுகை.. எது பெஸ்ட்!
- News
புதுச்சேரி காங். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்
- Sports
ரஹானே உருவாக்கிய 6+5 பார்முலா.. வேறு வழியின்றி விட்டுக்கொடுத்த கோலி.. இந்திய அணியில் செம டிவிஸ்ட்
- Lifestyle
கர்ப்பகாலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? எப்படி பாதுகாப்பா வைச்சுக்கணும் தெரியுமா?
- Automobiles
பிஎம்டபிள்யூ ஐ3 காரின் நிலைமை என்னவாக போகிறதோ! மனதை திருடும் அம்சங்களை அப்டேட்டாக பெறும் மின்சார கார்...
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இது என்ன குறலி வித்தை? மாலத்தீவு கடற்கரையில் வில்லாக வளைந்த ஹன்சிகா... தில்லாக கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை ஹன்சிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக இந்தியில் நடித்தவர் ஹன்சிகா. பின்னர் தேசமுத்ருடு என்ற தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆனார்.
தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் தமிழுக்கு வந்தார். ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யின் வேலாயுதம், உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, சிம்புவின் வாலு, ஜெயம்ரவியின் போகன் உட்பட பல படங்களில் நடித்தார்.

சிம்பு - ஹன்சிகா
இப்போது, மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்குகிறார். இவர், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இயக்குனர் லஷ்மணிடம் உதவி இயக்கு நராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தில் சிம்பு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். காதல் முறிவுக்குப் பிறகு சிம்பு - ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் இது என்பதால் பரபரப்பாகப் பேசப்பட்டது.

மாலத்தீவு
இந்தப் படத்தில், ஶ்ரீகாந்த், சாயாசிங், தம்பி ராமையா, நாசர், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை தவிர ஹன்சிகா வேறு படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் ஹன்சிகா இப்போது மாலத்தீவு சென்றுள்ளார். வழக்கமான மாலத்தீவுக்கு சுற்றுலாவுக்கு செல்லும் நடிகைகள், அங்கிருந்து ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

வில்லாக வளைத்து
அந்த வழக்கத்தை நடிகை ஹன்சிகாவும் பின்பற்றியுள்ளார். ஆனால், கிளாமர் புகைப்படங்கள் இல்லாமல், சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இதை சமந்தா, காஜல் அகர்வால், ஸ்ரேயா ரெட்டி உட்பட பல நடிகைகள் லைக் செய்துள்ளனர். ரசிகர்கள் ஜாலியாக கமென்ட் அடித்துள்ளனர். அதில் ஒரு போட்டோவில், கடற்கரை மணலில் உடலை வில்லாக வளைத்து நிற்கிறார் ஹன்சிகா.

சீக்கிரமா போங்க
இதற்கு, சண்டே மூட் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இதைக் கண்டு, என்னா வளைவு? ஹன்சிகா இது நீங்கதானா? என்று ரசிகர்கள் ஆச்சரியமாகக் கேட்டுள்ளனர். ஒரு ரசிகர், நானும் இப்படி வளைய பல முறை முயற்சிப்பண்ணிட்டேன் முடியலை என்று தெரிவித்துள்ளார். 'பார்த்து ஹன்சிகா, கொரோனா அங்கயும் வந்துட்டு இருக்குதாம்' என்றும், 'உலகத்துல என்ன நடந்துட்டிருக்கு, நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? சீக்கிரமா வீட்டுக்கு போங்க' என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

பிகினி போட்டோ
இன்னொரு கலாய் ரசிகர், இதுயென்ன குறலி வித்தை? இதையெல்லாமா கத்து வச்சிருக்கீங்க? என்று கேட்டுள்ளார். மற்றொரு போட்டோவில் நீச்சல் குளத்தில் படுத்தபடி, எதையோ பார்த்தவாறு இருக்கிறார் ஹன்ஸ். அதற்கு, என் ஒளிமயமான எதிர்காலத்தை பார்க்கிறேன் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். அதற்கு ரசிகர்கள், 'இதெல்லாம் இருக்கட்டும், பிகினி போட்டோவ எப்ப போடுவீங்க?' என்று கேட்டுள்ளனர். ஹன்சிகாவின் இந்த போடோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.