ரத்த சிவப்பு டிரெஸ்சில் ஹன்சிகா.. ஏன் இப்படி ஒல்லியாயிட்டீங்க? பாந்தமாக உருகும் பாசக்கார ஃபேன்ஸ்!

By

சென்னை: ஏன் இப்படி ஒல்லியாயிட்டீங்க? என்று நடிகை ஹன்சிகாவை, ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Recommended Video

டாப் ஆங்கிலில் நல்லா வளைச்சு வளைச்சு எடுத்திருக்காங்களே.. தீயாய் பரவும் யாஷிகாவின் ஹாட் வீடியோ!

குழந்தை நட்சத்திரமாக, இந்தியில் நடித்து வந்தவர் ஹன்சிகா. பின்னர் தேசமுத்ருடு என்ற தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆனார்.

தனுஷின் 'மாப்பிள்ளை' படம் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் மணிஷா கொய்ராலா உட்பட பலர் நடித்திருந்தனர்.

மஹா படத்தில்

மஹா படத்தில்

பின்னர் ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யின் வேலாயுதம், உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, சிம்புவின் வாலு, ஜெயம் ரவியின் போகன் உட்பட பல படங்களில் நடித்தார். இப்போது, மஹா படத்தில் நடித்து வருகிறார். இதை அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்குகிறார். இவர், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இயக்குனர் லஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

காதல் முறிவுக்குப் பின்

காதல் முறிவுக்குப் பின்

இந்தப் படத்தில் சிம்பு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். காதல் முறிவுக்குப் பிறகு சிம்பு - ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் இது என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில், ஶ்ரீகாந்த், சாயாசிங், தம்பி ராமையா, நாசர், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில் ஹன்சிகா கடந்த மாதம் மாலத்தீவு சென்றார்.

வில்லாக வளைத்து

வில்லாக வளைத்து

அங்கிருந்தபடி, சில போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதில் ஒரு போட்டோவில், கடற்கரை மணலில் உடலை வில்லாக வளைத்து நின்றார் ஹன்சிகா. இந்த போட்டோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இப்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் சில போட்டோஸ் பதிவிட்டுள்ளார் ஹன்சிகா.

ஒல்லியாயிட்டீங்க?

ரத்த சிவப்பு நிறத்தில் அவர் அணிந்துள்ள அந்த டிரெஸ், கவர்ச்சியாக இருக்கிறது. இந்த புகைப்படங்களில் அவர் ஒல்லியாக இருக்கிறார். இதையடுத்து ரசிகர்கள் ஏன் இப்படி ஒல்லியாயிட்டீங்க? என்று பாசமாக கேட்டுள்ளனர். ரெட் பியூட்டி என்று வர்ணித்துள்ள சிலர், லாக் டவுன் நேரத்துல இந்த போட்டோவ எங்க எடுத்தீங்க? என்று கேட்டுள்ளனர்.

வீட்டுலயே இருங்க

வீட்டுலயே இருங்க

'இன்னும் மாலத்தீவுலதான் இருக்கீங்களா? என்று ஒருவர் கேட்டுள்ளார். இதுக்கு மேல ஒல்லியாகிட்டா நல்லா இருக்காது? இதுவே போதும் என்று சில ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அழகு பொம்மையே, தயவு செய்து வீட்டுலயே இருங்க, போட்டோவுக்காகக் கூட வெளியே போகாதீங்க' என்று சில நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.

பழைய ஹன்சிகா

பழைய ஹன்சிகா

இது நஸ்ரியா போட்ட டிரெஸ் ஆச்சே?, வேற ஸ்டைல் கிடைக்கலையா? என்று சிலர் கூறியுள்ளனர். எங்களுக்கு பழைய புஸ் புஸ் ஹன்சிகாதான் வேணும்...இந்த ஒல்லி ஹன்சிகா வேண்டாம் என்று சிலர் கூறியுள்ளனர். அப்படியே உங்க சின்ன வயது போட்டோக்களையும் போடுங்களேன் என்று சில கோரிக்கை வைத்துள்ளனர். ஹன்சிகாவின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X