அம்மாவுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த ஹன்சிகா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
மும்பை : கொரானா வைரஸ் பொது முடக்கத்தால் தனது அம்மாவின் பிறந்த நாளை சகோதரருடன் இணைந்து சர்ப்ரைஸ் செய்து அசத்தினார் ஹன்சிகா மோத்வானி.
Recommended Video
இதுவரை நடிகையாக மட்டும் நாம் பார்த்து வந்த ஹன்சிகா மோத்வானி அம்மாவுக்காக பலூன் மற்றும் மலர்களால் வீட்டில் டெக்கரேட் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு சிம்புவுடன் இணைந்து மகா படத்தில் நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது இந்த பிறந்தநாள் புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

கொள்ளையடிக்கும் நடிப்பாலும்
இந்திய திரைப்படத் துறையில் பல ஆண்டுகளாக தனது கொழுகொழு அழகாலும் கொள்ளையடிக்கும் நடிப்பாலும் தொடர்ந்து வெற்றி நாயகியாக முடிசூடி வரும் ஹன்சிகா மோத்வானி எக்கச்சக்க ரசிகர்களை கொண்டு வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

காதல் முறிவு
தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்துறையில் மிகவும் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது தனது 50-வது திரைப்படமான மகா-வில் நடிகர் சிம்புவுடன் இணைந்து நடித்துவருகிறார். வாலு திரைப்படத்திற்கு பிறகு காதல் முறிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இருவரும் தொடர்ந்து நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வரும் மகா திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடி வருகிறது.

தங்களது வீடுகளில்
இந்நிலையில் தற்போதுள்ள கொரானா நோய்த்தொற்றின் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப் பட்டுள்ளது எந்த ஒரு படப்பிடிப்புகளும் நிகழ்ச்சிகளும் விழாக்களும் பிரமாண்டமான முறையில் நடைபெறாமல் இருந்து வரும் நிலையில் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்கள் உள்ளிட்ட மிக முக்கியமான நாட்களை பலரும் தங்களது வீடுகளில் எளிய முறையில் கொண்டாடி வருகின்றனர்.

வீட்டிலேயே மிக எளிமையாக
இச்சூழலில் நடிகை ஹன்சிகா மோத்வானி தனது அம்மாவின் பிறந்த நாளை வீட்டிலேயே மிக எளிமையான முறையில் தன்னுடைய சகோதரர் உடன் இணைந்து மலர்கள் மற்றும் பலூன்களால் வீட்டில் மிக அழகாக அலங்கரித்தும் கேக் வெட்டி கொண்டாடியும் அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

வீடியோவாக எடுத்து
இவ்வாறு ஹன்சிகா தனது சகோதரனுடன் வீட்டில் சுயமாக அலங்கரித்து கொண்டாடிய இந்த பிறந்தநாளை தனது அம்மாவுடன் கன்னத்தில் முத்தமிட்டவாறு வீடியோவாக எடுத்து மகிழ்ச்சி பொங்க அதை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி மகிழ்ந்துள்ளார்.

பிறந்த நாள்
இது ஒருபுறமிருக்க ஹன்சிகாவின் சகோதரரும் அவருடைய சமூக வலைதளங்களில் பிறந்தநாளை கொண்டாடிய பல்வேறு புகைப்படங்களுடன் ஹன்சிகா மற்றும் அம்மா மோனா மோத்வானி என மூவரும் எடுத்துக்கொண்ட அழகான பிளாக் அண்ட் வொய்ட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கேக் மற்றும் பரிசு
இவ்வாறு ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது சகோதரர் இந்த கடினமான லாக்டவுன் சூழலிலும் தனது அம்மாவிற்கு சர்ப்ரைஸாக வீட்டில் பிறந்தநாள் டெக்ரேஷன், கேக் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து கொண்டாடி உள்ளது பலரையும் பாராட்ட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











