ஈஃபில் டவர் மாதிரி இருக்கேனா... ஸ்லிம்மான லுக்கில் ஹன்சிகாவின் வெறித்தனமான செல்பி!
மும்பை : அதர்வாவின் 100 திரைப்படத்திற்குப் பிறகு தமிழில் ஹன்சிகாவுக்கு எந்த படங்களும் இதுவரை வெளியாகவில்லை.
50-வது திரைப்படமான மஹா முழு வீச்சில் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹா திரைப்படத்திற்காக உடல் எடையை முற்றிலும் குறைத்து ஸ்லிம்மான ஹன்சிகாவாக மாறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ள இவர் இப்பொழுது டைட்டான டிரஸ்ஸில் செம கூலாக வெளியிட்டுள்ள செல்பி புகைப்படம் வைரலாகி வருகிறது.

வெற்றிகரமான ஹீரோயினி
தென்னிந்தியாவின் கனவுக்கன்னியாக வலம் வந்துகொண்டிருந்த நடிகைகளில் நடிகை ஹன்சிகா மோத்வானி மிகவும் முக்கியமானவர். குழந்தை நட்சத்திரமாக இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமான இவர் இப்பொழுது வெற்றிகரமான ஹீரோயினியாக பல திரைப்படங்களில் கலக்கி வருகிறார்.

கொழுக் மொழுக்
ஆரம்பத்தில் கொழுக் மொழுக் தேகத்தோடு ரசிகர்களின் மனதை ஆர்ப்பரித்து வந்த ஹன்சிகா மோத்வானி தமிழுக்கு மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெற்றிகரமாக வலம் வந்த இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே ஏக போகமா வரவேற்பு இருந்தது.

மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில்
எங்கேயும் காதல், வேலாயுதம்,ஒரு கல் ஒரு கண்ணாடி, மான் கராத்தே, ரோமியோ ஜூலியட் என நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றிகளை குவிக்க, ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக முன்னணியில் இருக்கும் இவர் மலையாளத்தில் மட்டும் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்ததோடு நிறுத்திக்கொண்டார்.

போஸ்ட் புரொடக்ஷன்
பால் போன்ற மேனி கொழுக் மொழுக் தேகம் சும்மா பால் கொழுக்கட்டை போல உள்ள ஹன்சிகா தனது 50வது திரைப்படத்திற்காக உடல் எடை முழுவதும் மெலிந்து ஸ்லிம்மான ஹன்சிகாவாக மாறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல்வேறு கட்டங்களாக பரபரப்பாக நடித்து வந்த, மஹா திரைப்படம் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இப்பொழுது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதால் வேறெந்த திரைப் படங்களில் கவனம் செலுத்தாமல் உள்ளார்.

இணைந்து நடிக்காமல்
வாலு படத்தில் நடித்தபோது சிம்பு மற்றும் ஹன்சிகா இருவருக்கும் ஏற்பட்ட காதல் பின் குறுகிய காலத்திலேயே முறிந்து போக, அதன்பிறகு எந்த ஒரு திரைப்படங்களில் இணைந்து நடிக்காமல் இருந்த இவர்கள் இப்பொழுது மஹா திரைப்படத்தில் நடித்து வர எதிர்பார்ப்பு மேலும் எகிறுகிறது.

ஈபில் டவர்
ஸ்லிம்மான லுக்கில் ஹன்சிகா ஏற்கனவே வெளியிட்டிருந்த பல புகைப்படங்கள் இணைய தளத்தை கலக்கி வந்த நிலையில் இப்பொழுது செம டைட்டான உடையில் தொடை அழகு மொத்தமும் தெரிய ஸ்டன்னிங்கான லுக்கில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தன்னைத்தானே ரசித்தவாறு நான் இப்பொழுது பாரிசில் இருப்பதாக உணர்கிறேன், என இந்த லுக்கில் பார்க்க ஈபில் டவர் போல இருக்க பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications