Hansika: விவாகரத்திற்கு பின் விஸ்வரூபம்.. குட்டி டவுசரில் கிளாமர் வேட்டை ஆடும் ஹன்சிகா!
சென்னை: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த ஹன்சிகா மோத்வானி, தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக 'தேசமுதுரு' படம் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
ஹன்சிகா மோத்வானிற்கு திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இன்றும் ஹன்சிகா மோத்வானிக்கு என்று ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் இவரைப் பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள், இவரை 'சின்ன குஷ்பு' என்று புகழ்ந்து கொண்டாடினார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார் ஹன்சிகா.
ஹன்சிகா மோத்வானி: இவர் 2022 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சோஹைல் ஏற்கனவே திருமணம் ஆனவர், அதுவும் ஹன்சிகாவின் தோழியின் கணவரான இவரை ஹன்சிகா மோத்வானி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில நாட்களிலேயே இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் இருவரும் சட்டப்படி விவாகரத்தைப் பெற்று பிரிந்தனர்.

மஜாவான போஸ்: தற்போது ஹன்சிகா மோத்வானிக்கு படம் வாய்ப்புகள் எதுவுமே இல்லை என்றாலும், இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி தனது இன்ஸ்டாகிராமில் காக்கி நிறத்தில் குட்டி டவுசரும், வெள்ளை நிற ஷர்ட்டும் போட்டு அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை அவர் பதிவிட்ட சில மணி நேரங்களில் அது வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
கடைசியாக நடித்த திரைப்படங்கள்: தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஹன்சிகா, கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் கவனம் செலுத்தினார். ஹன்சிகாவின் நடிப்பில் 2024 ஆம் ஆண்டு 'கார்டியன்' என்ற ஹாரர்-த்ரில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன் தெலுங்கில் ஒரே ஒரு நபர் மட்டுமே நடிக்கும் '105 மினிட்ஸ்' என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது ஹன்சிகாவின் கைவசம் 'ரவுடி பேபி', 'காந்தாரி' உள்ளிட்ட சில திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் வெளியீட்டுக்கு தயாரான நிலைகளில் உள்ளன.


Click it and Unblock the Notifications