»   »  கடைசியில ஹன்சிகா நிலைமை இப்படியாகிப் போச்சேய்யா!

கடைசியில ஹன்சிகா நிலைமை இப்படியாகிப் போச்சேய்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்க்கெட் படுத்து தூங்கும் நிலையில் ஹன்சிகா விஷ்ணு விஷால் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

ஹன்சிகா நடிக்க வந்த புதிதில் கோடம்பாக்கத்தில் அவர் கொடுக்கும் பார்ட்டிகள் மிகவும் பிரபலம். பார்ட்டிகள் மூலம் அவர் வாய்ப்பு தேடியதாகவும் கூறப்பட்டது.

கோலிவுட்டின் முன்னணி நாயகியாகி படுபிசியானார் ஹன்சிகா.

விஜய்

விஜய்

விஜய், சூர்யா, தனுஷ் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். தமிழ் தவிர தெலுங்கு திரையுலகிலும் ஒரு ரவுண்டு வந்தார். கொழுக் மொழுக் என்று இருந்த ஹன்சிகாவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது.

ஹன்சிகா

ஹன்சிகா

ஹன்சிகா தனது உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாகிவிட்டார். இந்நிலையில் அவருக்கு மார்க்கெட்டு போய் கையில் படங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

தான் உச்சத்தில் இருந்தபோது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்தார் ஹன்சிகா. தற்போது சிவகார்த்திகேயன் உச்சத்தில் இருக்க ஹன்சிகா நிலைமை பரிதாபமாக உள்ளது. இந்நிலையில் தான் சிவாவுக்கு தூதுவிட்டு அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹன்சிகா.

விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால்

ஹன்சிகாவுக்கு வாய்ப்புகளே வராத நிலை உள்ளதால் இரண்டாம் நிலை ஹீரோவான விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். முருகானந்தம் இயக்க உள்ள படத்தில் தான் ஹன்சிகா நடிக்கவிருக்கிறார்.

English summary
According to reports, Hansika is going to act with Vishnu Vishal in his upcoming movie to be directed by Muruganandam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil