ஸாரி...டேட்ஸ் இல்லை விக்ரம்! - சீயானுக்கு ஹன்சிகா தந்த ஷாக்
விக்ரம் நடிக்கும் படத்துக்கு கேட்டபோது தேதி இல்லை... என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை ஹன்சிகா.
சிம்புவைக் காதலிப்பதாகக் கூறியதிலிருந்து எப்போதும் பரபரப்பு செய்திப் பட்டியலில் இடம்பெறும் நாயகியாகிவிட்டார் ஹன்சிகா.

7 படங்களில்...
பொதுவாக காதலில் விழுந்த, அதுவும் சக நடிகருடன் காதல் வயப்பட்ட நடிகைகள் வேகமாக பட வாய்ப்புகளை இழப்பார்கள். ஆனால் ஹன்சிகா விஷயத்தில் நேர்மாறாக உள்ளது விஷயம். சிம்புவும் அவரும் தீவிரமாக லவ்வும் இந்த நேரத்திலும் கைவசம் 7 படங்களை வைத்துள்ளார்.

அம்மாவின் கன்ட்ரோல்..
ஹன்சிகாவின் மனசு சிம்புவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், சினிமா கேரியரை கட்டுப்படுத்தி வருபவர் ஹன்சியின் அம்மா மோனா மோத்வானிதான். கல்யாணத்துக்கு சிம்புவும் ஹன்சிகாவும் அவசரப்பட்டாலும், மோனா மட்டும் நல்ல வாய்ப்புகள் வந்தால் விடாமல் அட்வான்ஸை வாங்கிக் குவிக்கிறாராம்.

விக்ரம் - தரணி படம்
இப்படி அட்வான்ஸ் வாங்குவதில் ஆர்வம் காட்டும் ஹன்சிகாவின் அம்மாவே, ஒரு படத்துக்கு ஹன்சிகாவின் கால்ஷீட் இல்லை என கைவிரித்திருக்கிறார். அது ஒரு பெரிய படம். விக்ரம்தான் ஹீரோ.

தில், தூளுக்குப் பிறகு...
தில், தூள் வெற்றிப் படங்களுக்குப் பிறகு விக்ரம்- தரணி கூட்டணியில் உருவாகும் புதிய படம் இது. மெகா பொழுதுபோக்குப் படமாக இதனை உருவாக்க திட்டமிட்டுள்ளார்கள் தரணியும் விக்ரமும். ஷங்கரின் ஐ படம் முடிந்த கையோடு இந்தப் புதுப்படத்தை ஆரம்பிக்கிறார்கள். ஐங்கரன் நிறுவனம் தயாரிக்கிறது.

ஐ'யாம் டூ பிஸி...
இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்குமாறு ஹன்சிகாவிடம் கேட்டார்களாம். அதற்கு ஹன்சிகா தன் அம்மாவைக் கைகாட்ட, அவரோ, "ஸாரி, தமிழ், தெலுங்கில் என் மகள் ரொம்ப பிஸி," என கைவிரி, இத நாங்க எதிர்ப்பார்க்கவே இல்லை என்று ஏமாற்றத்தோடு வேறு நாயகி தேடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











