‘ராஸ்கல்’ படத்தில் விக்ரம் ஜோடியான ஹன்சிகா... கடுப்பான திரிஷா

By Mayura Akilan

தரணி இயக்கும் ராஸ்கல் படத்தில் விக்ரம் ஜோடியாக ஹன்சிகா மோத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை அறிந்த திரிஷா கடும் கோபத்தில் இருக்கிறாராம். விக்ரம் ஜோடியாக தன்னைத்தான் ஒப்பந்தம் செய்வார்கள் என்று நினைத்திருந்த அவர் ஏமாற்றமடைந்துவிட்டாராம்.

ஏற்கனவே விக்ரமுடன் லிங்குசாமி இயக்கிய படத்தில் ஜோடி சேர்ந்த திரிஷா மீண்டும் தரணி - விக்ரம் கூட்டணியில் ஜோடி சேரலாம் என்று நினைத்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்பதுதான் திரிஷாவின் கோபத்திற்குக் காரணமாம்.

விக்ரமின் ராஸ்கல்

விக்ரமின் ராஸ்கல்

ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் விக்ரம் அடுத்ததாக தரணி இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘ராஸ்கல்' எனப் பெயர் வைத்துள்ளனர்.

ஜோடி கிடைக்கலையே

ஜோடி கிடைக்கலையே

விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க, ஊர் ஊராக தேடி வந்தார் தரணி. மும்பையில் ரூம் போட்டு கூட யோசித்துப் பார்த்தார். ஆனால், யாருமே செலக்ட் ஆகவில்லை.

சிக்கிய ஹன்சிகா

சிக்கிய ஹன்சிகா

கடைசியில் ஹன்சிகா மோத்வானியைத் தேர்ந்து எடுத்து இருக்கிறார், தரணி. விக்ரமுடன் முதன் முறையாக ஜோடி சேருகிறார் ஹன்சிகா.

திரிஷாவின் நிலை

திரிஷாவின் நிலை

இதனால் கடும் கொந்தளிப்பில் தகிக்கிறார், திரிஷா. விக்ரமுடன் தன்னைத்தான் ஹீரோயினாக்குவார் தரணி என த்ரிஷா கட்டிய மனக்கோட்டை இடிந்ததுதான் இதற்குக் காரணமாம்.

தரணி படத்தில் திரிஷா

தரணி படத்தில் திரிஷா

ஏற்கனவே தரணி இயக்கிய குருவி படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். ஆனால் ராஸ்கல் படத்தில் ஹன்சிகாவை ஹீரோயினாக்கிவிட்டார் தரணி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X