சர்ச்சை, சர்ச்சை சர்ச்சையோ சர்ச்சையில் சிக்கும் ஹன்சிகா
Recommended Video

சென்னை: ஹன்சிகாவின் மகா படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் படம் மகா. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படம் ஹன்சிகாவின் 50வது படம் ஆகும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே சர்ச்சையாக இருந்தது.
செகண்ட் லுக்காலும் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் மூன்றாவது லுக் போஸ்டர் வந்துள்ளது.
ஹன்சிகா
மகா படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரத்தத்தால் நிரப்பப்பட்டுள்ள குளியல் தொட்டியில் படுத்துக் கொண்டு கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்துள்ளார் ஹன்சிகா.
ரத்தம்
புத்தாண்டுக்கு இப்படி ரத்தத்தை காட்டியா வாழ்த்து தெரிவிப்பது. ஆனால் போஸ்டர் ஹன்சிகா ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. ஹன்சிகா கெத்தாக இருப்பதாகக் கூறி பெருமைப்படுகிறார்கள்.

போஸ்டர்கள்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா காவி அணிந்து தம்மடித்தார். செகண்ட் லுக் போஸ்டரில் தலையில் முக்காடு போட்டு தொழுதார். மூன்றாவது லுக்கில் ரத்தத்தில் குளிக்கிறார். சர்ச்சையை கிளப்புவது என்று ஒரு முடிவோடு தான் உள்ளது படக்குழு.

கதாபாத்திரம்
சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு போஸ்டர்களை வெளியிடவில்லை. கதைக்கு தேவைப்படுகிறது. படத்தை பார்க்கும்போது புரியும் என்கிறார் இயக்குனர் ஜமீல்.


Click it and Unblock the Notifications











