மழையில் நனைந்து சென்னையில் டிராபிக் ஜாமில் சிக்கிய ஹன்சிகாவுக்கு கைகொடுத்த மக்கள்

By Siva

சென்னை: சென்னையில் மழையினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தான் படாதபாடு பட்டாலும் மக்கள் தன் மீது வைத்துள்ள அன்பை நினைத்து மகிழ்ந்துள்ளார் நடிகை ஹன்சிகா.

கனமழை பெய்ததும் பெய்தது சென்னை வெள்ளக்காடானது. மக்கள் படகுகளில் செல்லும் அளவுக்கு நிலைமை மோசமானது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி இரவு சென்னைவாசிகளுக்கு மோசமான இரவு. காரணம் அன்று இரவு ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல்.

அந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஹன்சிகாவும் நொந்து, நூடுல்ஸ் ஆகியுள்ளார். இந்நிலையில் இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சென்னை

சென்னை

நவம்பர் 24ம் தேதி இரவு 8 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினேன். கொட்டு கொட்டென்று கொட்டிய மழையை பார்த்து அதிர்ந்து போனேன்.

கார்

கார்

விமான நிலையத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு காரில் ஹோட்டலுக்கு கிளம்பினேன். கார் ஆமை வேகத்தில் நகர்ந்ததால் எனக்கு பிடித்த டிவி தொடர்களை பார்க்க ஆரம்பித்தேன்.

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

3 மணிநேரம் ஆகியும் கார் ஏர்போர்ட் ரோட்டிலேயே இருந்தது. நான் எனக்கு பிடித்த படத்தை பார்க்கத் துவங்கினேன். கார் ஒரு கிலோமீட்டர் கூட செல்லவில்லை.

நள்ளிரவு

நள்ளிரவு

நள்ளிரவாகிவிட்டது, என் கால்கள் வலிக்கத் துவங்கின. இனியும் காத்திருக்க முடியாது என்று காரில் இருந்து இறங்கி அருகில் உள்ள ஹோட்டலை தேடி சென்றேன்.

மழை

மழை

மழையில் நனைந்து என் மேனி எல்லாம் சேரும், சகதியுமாக இருந்தது. நான் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என்பது தான் என் நோக்கம்.

சாலைகள்

சாலைகள்

மழையால் சாலைகள் பாதிகப்பட்டு போக்குவரத்து முடங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். மக்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டனர். சிலர் என் பெயரைக் கூறி அழைத்தனர்.

தென்னிந்தியா

தென்னிந்தியா

தென்னிந்தியா தான் என் வீடு என்று நினைப்பவள் நான். இங்கு நான் பாதுகாப்பாக உணர்கிறேன். என் நம்பிக்கையை மக்கள் உண்மையாக்கினர்.

உதவி

உதவி

மக்கள் ஹோட்டலுக்கு செல்ல எனக்கு வழி காண்பித்து உதவி செய்தனர். நான் பாதுகாப்பாக இல்லை என்று ஒரு நொடி கூட நினைக்கவில்லை.

ஹோட்டல்

ஹோட்டல்

இரவு 1 மணிக்கு ஹோட்டலுக்கு சென்று படுக்கையில் படுத்தேன். சென்னை என் வீடு என்பது இன்று உண்மையாகிவிட்டது.

அன்பு

அன்பு

என்னை வெளியாளாக பார்க்காமல் மக்கள் காண்பித்த அன்பையும், பாசத்தையும் பார்த்து நெகிழ்ந்துவிட்டேன்.

வெள்ளம்

வெள்ளம்

வெள்ளத்தில் தத்தளித்தாலும் மக்கள் பிறருக்கு உதவி செய்கிறார்கள். ஹோட்டலுக்கு செல்லும் வழியில் பல சம்பவங்களை பார்த்தேன்.

சென்னை மக்கள்

எனக்காக சென்னை மக்கள் உள்ளனர் என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோன்ற நேரங்களில் அவர்களுக்காக நானும் உள்ளேன். தமிழ்நாட்டு மக்களே பத்திரமாக இருந்து கொள்ளுங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு என் அன்பும், பிரார்த்தனைகளும் என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X