ஹன்சிகா வரைந்த ஓவியத்துக்கு ரூ 15 லட்சம் தந்த நண்பர்!
மும்பை: நடிகை ஹன்சிகா வரைந்த ஒரு ஓவியத்தை ரூ 15 லட்சம் கொடுத்து வாங்கிக் கொண்டாராம் அவரது நண்பர்.
ஹன்சிகா நடிகை மட்டுமல்ல, நன்கு ஓவியம் வரைபவரும் கூட. சிறு வயதில் இருந்தே நிறைய ஓவியங்களை வரைந்து வைத்துள்ளாராம்.
படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும் ஓய்வு நேரங்களிலும் ஓவியங்கள் வரைவதில் பொழுதைக் கழிக்கிறார்.

கண்காட்சி
இதுவரை தான் வரைந்த ஓவியங்கள் அனைத்தையும் வைத்து கண்காட்சி நடந்த திட்டமிட்டு உள்ளார். கண்காட்சியில் ஓவியங்களை விற்று ஏழை குழந்தைகள் கல்விக்காக நிதி திரட்டவும் முடிவு செய்துள்ளார்.

ஏழைக் குழந்தைகளுக்காக
ஏற்கனவே ஹன்சிகா 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். இக்குழந்தைகளுக்கான கல்வி மற்றும் உணவு, தங்குமிடத்துக்கான செலவுகளை அவரே ஏற்றுள்ளார்.

பிறந்த நாளில்
வருகிற 9-ந்தேதி தனது பிறந்த நாளையொட்டி மேலும் 5 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறாராம் ஹன்சிகா.

அறக்கட்டளை
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காகவே ‘ஹன்சிகா குழந்தைகள் நல அறக்கட்டளை' என்ற அமைப்பை துவங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம்தான் ஓவியக் கண்காட்சி நடத்தப் போகிறார்.

ரூ 15 லட்சம்
கண்காட்சி நடத்துவதற்கு முன்பாகவே ஹன்சிகா வரைந்த ராதாகிருஷ்ணா ஓவியத்துக்கு ரூ.15 லட்சம் கொடுத்துள்ளார் ஹன்சிகாவின் நண்பர். வீட்டில் இருந்த இந்த ஓவியத்தைப் பார்த்ததுமே இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்துவிட்டாராம் நண்பர்.


Click it and Unblock the Notifications











