twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் மேனேஜர் என்று சொல்லி ஏமாற்றும் நபர்! - ஹன்சிகா புகார்

    By Shankar
    |

    சென்னை: என்னுடைய மேனேஜர் என்று கூறிக் கொண்டு ஒருவர் மோசடி செய்து வருகிறார். அவரை நம்ப வேண்டாம். என் அம்மாதான் என் விவகாரங்களைக் கவனிக்கிறார், என நடிகை ஹன்சிகா இன்ரு தெரிவித்துள்ளார்.

    திரையுலகில் நடிகைகள், நடிகர்களுக்கு மேனேஜர்கள் என்று சிலர் வேலை பார்ப்பார்கள். இவர்கள்தான் நடிகர் நடிகைகளின் கால்ஷீட் விவகாரங்களைக் கவனிப்பது மற்றும் சம்பளம் பேசுவதெல்லாம்.

    சிலர், அதிகாரப்பூர்வமாக மேனேஜராக இல்லாமலேயே, குறிப்பிட்ட நடிகர் நடிகைகளின் பெயர்களைச் சொல்லி சம்பளம் பேசி கமிஷன் பார்ப்பதும் நடக்கிறது.

    அப்படி ஒரு நபர் ஹன்சிகாவின் பெயரைப் பயன்படுத்தி வருகிறாராம். இதனை அறிந்த ஹன்சிகா இன்று ஒரு எச்சரிக்கை மற்றும் புகார் கடிதம் அனுப்பியுள்ளார் மீடியாவுக்கு.

    அதில், "எனக்கு மேனேஜர் என்று சொல்லிக் கொண்டு யாரோ ஒருவர் தயாரிப்பாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடம் சம்பளம் பேசி வருவதாக திரையுலக நண்பர்கள் மூலம் அறிந்தேன். எனக்கு அப்படி யாரும் மேனேஜர் இல்லை. என் அம்மா டாக்டர் மோனாதான் என் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனித்து வருகிறார். மோசடி நபர்களை நம்பி ஏமாறாதீர்கள்," என்று கூறியுள்ளார்.

    English summary
    Actress Hansika has denied that there is no official manager to her and her mother Dr Mohan is handling all her affair.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X