அஜீத்துடன் ஜோடி சேர ஆசைப்படும் ஹன்சிகா!
நான் அஜீத்தின் தீவிர ரசிகை. அவருடந் ஜோடி சேர ஆசை என்று கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா.
தமிழில், நயன்தாராவுக்கு அடுத்த ரேஞ்சில் இருப்பவர் ஹன்சிகா. தெலுங்கிலும் முன்னணியில் உள்ளார்.

அஜீத் மிஸ்ஸிங்
தமிழில் விஜய், சூர்யா, ஆர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி, கார்த்தி, உதயநிதி போன்றோருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். ஆனால் இதுவரை அஜீத்துடன் நடிக்கவில்லை.
கனவு
ரஜினிக்கு அடுத்து அஜீத்துடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது முன்னணி நடிகைகளின் கனவாக இருக்கிறது. இதில் பல நடிகைகளின் ஆசை நிறைவேறிவிட்டது.
ஹன்சிகா
நயன்தாரா, திரிஷா, தமன்னா, அசின் உள்ளிட்ட பலர் ஜோடியாக நடித்து விட்டனர். தனக்கும் அஜீத் ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது என்று ஹன்சிகா தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறும் போது, ‘நான் அஜீத்தின் தீவிர ரசிகை. அவருக்கு ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்பது எனது கனவு. அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











