சிம்பு, நயன்தாராவுக்காக த்ரிஷாவின் பர்த்டே பார்ட்டிக்கு செல்லாத ஹன்சிகா?
சென்னை: சிம்பு, நயன்தாராவை சந்திப்பதை தவிர்க்க ஹன்சிகா த்ரிஷாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
த்ரிஷா கடந்த 4ம் தேதி தனது பிறந்தநாளையொட்டி திரையுலக நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பார்ட்டிக்கு முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் வந்திருந்தனர்.

ஹன்சிகா
த்ரிஷா ஹன்சிகாவையும் பார்ட்டிக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர் தான் வரவில்லை.

சிம்பு-நயன்
த்ரிஷாவின் பார்ட்டிக்கு வந்தால் முன்னாள் காதலரான சிம்பு, அவருடைய முன்னாள் காதலியான நயன்தாராவை பார்க்க வேண்டுமே என்று தான் ஹன்சிகா வரவில்லை என்று கூறப்படுகிறது.

ஏர்போர்ட்
ஹன்சிகா சிம்புவை காதலித்த காலத்தில் நயன்தாராவை விமான நிலையத்தில் பார்த்தார். ஆனால் அவர்கள் இருவரும் கண்டும் காணாமலும் ஆளுக்கொரு பக்கம் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு
த்ரிஷா கொடுத்த பார்ட்டியில் சிம்புவும், நயனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதை பார்த்த சிம்பு ரசிகர்கள் அவர் மீண்டும் நயன்தாரவுடன் சேர்ந்துவிட்டார் போல என்று கூறினர்.

வாலு
வாலு படத்தில் மீதமூள்ள பாடல் காட்சிகளை படமாக்குவதற்காக சிம்புவும், ஹன்சிகாவும் தங்களது தனிப்பட்ட விஷயத்தை மறந்து ஒன்று சேர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











