இன்னும் இரண்டு நாட்களில் ஹன்சிகாவுக்கு திருமணம்.. அட பாவிங்களா.. ஆனா இது ஹன்ஸுக்கே தெரியாது?
சென்னை: நடிகைகளுக்கு திருமணம் என்கிற வதந்திகள் அதிகளவில் ஆன்லைன் போர்ட்ல்களில் அவ்வப்போது வலம் வருவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், அந்த வரிசையில் தற்போது மாட்டி உள்ள பிரபலம் நடிகை ஹன்சிகா தான்.
இன்னும் இரண்டு நாட்களில், தொழிலதிபர் ஒருவருடன் அவருக்கு திருமணம் என்ற வதந்தி வைரலாகி வருகிறது.

ஹிரித்திக் ரோஷன் படத்தில்
இந்தியாவின் சூப்பர் ஹீரோ க்ரிஷ் படத்திற்கு முன்னோடியாக இருந்த ஹிரித்திக் ரோஷனின் ஏலியன் படமான கொய் மில் கயா படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹன்சிகா, "ஷகலகா பூம் பூம்" என்ற 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான டிவி தொடரில் சின்ன குழந்தையாக நடித்து அசத்தி இருந்தார்.

15 வயதில்
சிறு வயது முதலே பல டிவி தொடர்களில் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, தனது 15வது வயதில் பூரி ஜெகநாத் இயக்கத்தில் வெளியான தேசமுத்ரு எனும் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

டாப் ஹீரோக்கள்
நயன்தாராவுக்கு பிறகு ஹன்சிகா தான் என்கிற ரேஞ்சுக்கு தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, விஜய், சூர்யா, கார்த்தி, சித்தார்த், சிவகார்த்திகேயன், அதர்வா என கோலிவுட்டின் அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்தார் ஹன்சிகா. பப்ளியான நடிகை என்றும் சின்ன குஷ்பு என்றும் வர்ணிக்கப்பட்டார்.

சிம்புவுடன் காதல்
லேடி சூப்பர் நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் இடையே ஏற்பட்ட காதல் பிரேக்கப் ஆன நிலையில், வாலு படத்தில் அவருடன் ஜோடியாக நடித்த ஹன்சிகா, சிம்புவை காதலிக்க தொடங்கினார். கோலிவுட்டின் அடுத்த ஹாட் காதல் ஜோடியாக வலம் வந்த அவர்கள், பின்னர் சில பல பிரச்சனைகள் காரணமாக பிரிந்தனர்.

மார்க்கெட் காலி
டாப் ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்து வந்தாலும், ஹன்சிகா நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியையே தழுவின. பப்ளியான தனது உடல் எடையை ஸ்லிம்மாக குறைத்த பின்னர், அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மார்க்கெட்டும் காலியாகி புதிய பட வாய்ப்புகளே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஹீரோயின் சென்ட்ரிக்
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ஹாரர் படமான அரண்மனை படத்தில் நடித்து ஹிட் கொடுத்த ஹன்சிகா மோத்வானி, நயன்தாரா, ஜோதிகா, சமந்தாவை போல ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் நடிக்க முடிவு செய்தார். மஹா எனும் படத்தின் போஸ்டர்களும் வெளியாகி மிரட்டின. சிறப்பு தோற்றத்தில் மீண்டும் சிம்புவுடனும் நடித்துள்ள ஹன்சிகா அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

ஹன்சிகாவுக்கு கல்யாணம்
இந்நிலையில், சில ஆன்லைன் போர்ட்டல்கள் நடிகை ஹன்சிகாவுக்கு தொழில் அதிபர் ஒருவருடன் இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற போவதாக செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த செய்தி வைரலான நிலையில், அதை பார்த்த ஹன்சிகா அதிர்ந்து போய் அதற்கு பதிலளித்துள்ளார்.

மாப்பிள்ளை யார்?
என்ன ஒரு முட்டாள்த்தனமான செய்தி என்று ஸ்மைலி எமோஜிக்களை பதிவிட்டு அந்த செய்திக்கு கீழ் கமெண்ட் செய்துள்ள நடிகை ஹன்சிகா, மாப்பிள்ளை யாருன்னு நீங்களே சொல்லிடுங்க என அந்த போலி செய்தியை விளாசித் தள்ளி உள்ளார். அதை பார்த்த ஹன்சிகாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விஷயம் ஹன்ஷுக்கே தெரியாதே
நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு அரசியல்வாதியை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அண்மையில் ஒரு பொய்யான தகவல் வைரலானது. ஆனால், அது வதந்தி என அவரது சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதுபோல, தற்போது ஹன்சிகா திருமணம் குறித்த வதந்திக்கு நேரடியாக அவரே இப்படி பதிவிட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள், அட பாவிகளா.. இந்த விஷயம் ஹன்ஸுக்கே தெரியாதே என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











