»   »  விஜய்யின் வேகத்திற்கு ஈடாக டான்ஸ் ஆட திணறிய ஹன்சிகா

விஜய்யின் வேகத்திற்கு ஈடாக டான்ஸ் ஆட திணறிய ஹன்சிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படத்தில் விஜய்யின் வேகத்திற்கு இணையாக ஆட முடியாமல் ஹன்சிகா திணறினாராம்.

சிம்புதேவன் இயக்கி வரும் புலி படத்தில் விஜய் நடித்து வருகிறார். அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா ஆகியோர் நடித்துக் கொண்டுள்ளனர். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியும் நடிக்கிறார்.


இந்நிலையில் படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


விஜய்

விஜய்

இளைய தளபதி விஜய் எப்படி டான்ஸ் ஆடுவார் என்று நாங்கள் கூறி நீங்கள் தெரிந்து கொள்ளத் தேவையில்லை. மனிதர் அசத்தலாக ஆடுவார்.


அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

சிறுத்தை படத்தின் இந்தி ரீமேக்கான ரவுடி ரத்தோரில் ஒரு பாடலுக்கு அதுவும் சில ஸ்டெப்ஸ் தான் போட்டார் விஜய். அதை பார்த்தே படத்தின் ஹீரோ அக்ஷய் குமார் அசந்துபோய் இவருக்கு என்ன 17 வயதா என்று கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


புலி

புலி

புலி படத்தில் விஜய், ஹன்சிகா ஆடும் ஒரு பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர். அந்த பாடல் காட்சியில் விஜய்க்கு ஏற்றது போன்று ஸ்டெப்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.


ஹன்சிகா

ஹன்சிகா

விஜய் தனக்கே உரிய ஸ்டைலில் வேகமாக ஆடியுள்ளார். ஆனால் ஹன்சிகாவால் விஜய்யின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஆட முடியாமல் திணறியுள்ளார்.


வேகம்

வேகம்

ஹன்சிகா திணறி பல டேக்குளை வாங்கியதைப் பார்த்த விஜய் தனது வேகத்தை குறைத்துக் கொண்டு ஆடியுள்ளார்.


English summary
Hansika has reportedly struugled to dance with Vijay for a song in the upcoming movie Puli.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil