Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இணையத்தை கலக்கும் நடிகை ஹன்சிகாவின் குளியல் வீடியோ!
சென்னை: நடிகை ஹன்சிகா பக்கெட் தண்ணீரில் குளிக்கும் வீடியோதான் இப்போது பரபரப்பாக இணையத்தில் சுற்றி வருகிறது. திரிஷா குளித்ததாக கூறப்பட்ட பிரச்சினையே ஓயாத நிலையில் இது வேறயா என்று யாரும் விவகாரமாக யோசிக்க வேண்டாம். இது வேறு மாதிரி குளியல். உலக நன்மைக்காகவே ஹன்சிகா குளித்துள்ளார்.
ஐஸ்பக்கெட் சேலஞ்ச்
இப்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ளது ஐஸ்பக்கெட் விளையாட்டுதான். இது ஏ.எல்.எஸ் என்னும் அமைப்பு நடத்தும் விழிப்புணர்வு சேலஞ்ச் ஆகும். ஏ.எல்.எஸ். என்னும் நோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும். இதில் பங்கேற்பவர் ஒரு பக்கெட்டில் ஐஸ் வாட்டரை எடுத்துக் கொண்டு அதனை அவர் மீது ஊற்றி கொள்ள வேண்டும்.
விளையாட்டில் நிதி திரட்டல்
அதன் பின்பு அவருக்கு தெரிந்த மூன்று பேரை கைக்காட்ட வேண்டும். அவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் இது போல செய்ய வேண்டும். இதனை செய்ய தவறுபவர்கள் ஏ.எல்.எஸ். அமைப்புக்கு 100 டாலர் உதவியாக வழங்க வேண்டும். இதன் மூலம் இந்த நோயை பற்றி உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்வார்கள் என்பது இதன் நோக்கம்.
ஹன்சிகா வீடியோ
இதில் பங்கேற்று ஹன்சிகா ஐஸ்பக்கெட் தண்ணீரை தலையில் ஊற்றியுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் சுற்றிவருகிறது. அந்த வீடியோ காட்சியில், வீட்டின் குளியலறை போன்ற பகுதியில், பேண்ட் மற்றும் டாப் அணிந்திருக்கும் ஹன்சிகா, தலையில் தண்ணீரை கொட்டியபடி நடுங்குவது பதிவாகியுள்ளது.
கவர்ச்சி குளியல்
ஏதோ நல்ல எண்ணத்தில் குளிரை பொருட்படுத்தாது ஹன்சிகா தலையில் தண்ணீரை ஊற்றியுள்ளார். ஆனால் கொழுக், மொழுக் ஹன்சிகா, தொப்புள் தெரிய குளிப்பதை பார்ப்பதற்காகவே ஒரு கோஷ்டி வீடியோவை திரும்ப திரும்ப பார்த்து ஹிட் ஆக்கிவிட்டதாம்.