என்ன ஒரு ஒற்றுமை.. என் சூப்பர் ஹீரோவுக்கு இன்னைக்கு தான் பர்த்டே.. யாஷிகா ஆனந்த் ஹேப்பி டிவீட்!

சென்னை: தந்தையர் தினமும், தனது தந்தையின் பிறந்தநாளும் ஒரே நாளில் வந்திருப்பது என்ன ஒரு ஒற்றுமை என நடிகை யாஷிகா ஆனந்த் டிவீட் போட்டுள்ளார்.

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தனது சமூக வலைதள பக்கங்களில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டும் வைரலாக்கி வருகிறார்.

சினிமா டு சீரியல்

சினிமா டு சீரியல்

இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த் கைவசம் இவன் தான் உத்தமன், ராஜபீமா உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், திடீரென சீரியலில் களமிறங்க முடிவு செய்திருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் இவர் வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ன ஒரு ஒற்றுமை

என்ன ஒரு ஒற்றுமை

தந்தையர் தினமான இன்று தனது தந்தை சேத்தன் ஆனந்துக்கு பிறந்தநாள் என நடிகை யாஷிகா ஆனந்த், பதிவிட்டு, என்ன ஒரு ஒற்றுமை என டிவீட்டியுள்ளார். தந்தையர் தினத்தை முன்னிட்டு பல நடிகைகளும் தங்கள் அப்பாவுக்கு முத்தம் கொடுப்பது போலவும், கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

என்னுடைய சூப்பர் ஹீரோவுக்கு சந்தோஷமான பிறந்தநாள் இது, என தந்தை சேத்தன் ஆனந்த் மற்றும் தாய் சோனல் ஆனந்துடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை யாஷிகா ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும், தந்தையர் தின வாழ்த்துக்களையும் கூடவே பதிவிட்டுள்ளார்.

ஒல்லி பெல்லி

ஒல்லி பெல்லி

இரண்டு நாட்களுக்கு முன்னதாக தனது டிசர்ட்டை தூக்கி வயிற்றுப் பகுதியை காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி இருந்தார் யாஷிகா ஆனந்த். இந்த மூன்று மாத லாக்டவுனில், உடற்பயிற்சி செய்து, தனது உடல் எடையை குறைத்து ஒல்லி பெல்லியான தோற்றத்திற்கு வந்திருந்த யாஷிகாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தொப்புளில் குத்தியிருக்கும் பியர்சிங்கை பற்றியே கமெண்ட் செய்து ஜொள்ளு வடித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X