நம்ம 'மயிலு' ஸ்ரீதேவிக்கு இன்று 50வது பிறந்த நாள்!

By Mathi

சென்னை/மும்பை: தென்னிந்திய திரை உலகில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நமது தமிழ்நாட்டில் பிறந்த நடிகை ஸ்ரீதேவி. இன்று அவருக்கு வயது 50.

தமிழ்நாட்டின் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் பிறந்தவர்தான் ஸ்ரீதேவி. 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ந் தேதி பிறந்தார் அவர்.

ஸ்ரீதேவியின் குடும்பம்

ஸ்ரீதேவியின் குடும்பம்

சிவகாசி வழக்கறிஞர் அய்யப்பன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியினரின் மகள் ஸ்ரீதேவி. 1996ஆம் ஆண்டு பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஜானவரி குஷி என்ற இரு மகள்கள்..

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

தமது 4 வயதில் துணைவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் கந்தன் கருணை, பிரார்த்தனை, பாபு, வசந்த மாளிகை போன்ற முக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

1970களின் இறுதியில் கொடிகட்டிப் பறந்தார்

1970களின் இறுதியில் கொடிகட்டிப் பறந்தார்

1970களின் இறுதியில் தென்னிந்திய திரை உலகில் கொடி கட்டிப் பறந்தார் ஸ்ரீதேவி. கே.பாலச்சந்தரின் மூன்று முடிச்சு, பாரதிராஜாவின் 16 வயதினிலே 'மயிலு' என தொடங்கிய ஸ்ரீதேவியின் பயணம் சிகப்பு ரோஜாக்கள், பிரியா, ஜானி, வறுமையின் நிறம் சிவப்பு என விரிந்து விஸ்வரூபமெடுத்தது.

1980களில் மயிலு ராஜ்ஜியம்தான்!

1980களில் மயிலு ராஜ்ஜியம்தான்!

1980களில் மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை என தமிழ்படங்களில் மட்டுமின்றி தெலுங்கு திரை உலகிலும் கோலோச்சினார். ஹிம்மத்வாலா படம் மூலம் பாலிவுட்டில் வேரூன்றி நின்றார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் வெற்றிக் கொடி பயணம் 1990களின் தொடக்கம் வரை தொடர்ந்தது.

திருமணத்துக்குப் பின்னர்..

திருமணத்துக்குப் பின்னர்..

திருமணத்துக்குப் பின்னர் 2004-ல் ஹிந்தி தொலைக்காட்சி தொடரில் நடிக்கத் தொடங்கினார் ஸ்ரீதேவி. இந்த பயணத்தையும் சில ஆண்டுகள் தொடர்ந்தார்..

2012-ல் மீண்டும் திரை பிரவேசம்

2012-ல் மீண்டும் திரை பிரவேசம்

2012ஆம் ஆண்டு இங்கிலீஷ் விங்கிலீஸ் திரைப்படம் மூலம் மீண்டும் திரை உலகில் பிரவேசமானார் மயிலு. தற்போது நம்ம ஊர் பிரபுதேவாவின் படம் ஒன்றில் ஸ்ரீதேவி நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

விருதுகள்

விருதுகள்

மயில் வாங்கிய விருதுகள் பட்டியல் ரொம்ப நீளம். இந்த ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதும் மயிலுக்கு கிடைத்திருக்கிறது. முன்பு தமிழக, ஆந்திர அரசின் ஏராள விருதுகளையும் திரை உலக விருதுகளையும் பெற்றுக் குவித்தவர் ஸ்ரீதேவி.
நம்ம மயிலுக்கு நாமும் 50வது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிப்போம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X