அனேகன் நாயகிக்கு ஹேப்பி பர்த்டே.. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கும் அமைரா தஸ்தூர்!

சென்னை: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கி வரும் நடிகை அமைரா தஸ்தூரின் 27வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Recommended Video

Vj Manimegalai Surprise Birthday Celebration | Manimegalai Hussain

பள்ளி படிப்பை படித்துக் கொண்டிருந்த அமைரா தஸ்தூருக்கு கடந்த 2013ம் ஆண்டு இந்தி படமான ஐசாக் படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

வெண்ணெய் சிலை போல இருக்கும் அமைராவை 2015ம் ஆண்டு இயக்குநர் கே.வி. ஆனந்த், தனுஷ் நடிப்பில் வெளியான அநேகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தார்.

அழகு சிலை அமைரா

அழகு சிலை அமைரா

1993ம் ஆண்டு மே 7ம் தேதி மும்பையில் பிறந்தவர் அமைரா தஸ்தூர். கோலிவுட், கேத்தட்ரல் பள்ளியில் ஆரம்ப பள்ளியை படித்த அமைரா தஸ்தூர், உயர்நிலைக் கல்வியை திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, இயக்குநர் மணிஷ் திவாரியின் ஐசாக் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

அனேகன்

அனேகன்

கனா கண்டேன், அயன், மாற்றான், கோ படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், கார்த்தி நடிப்பில் வெளியான படம் அநேகன். சைக்காலஜிக்கல் த்ரில்லர் லவ் ஸ்டோரியாக உருவான அந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக அமைரா தஸ்தூர் நடித்து அசத்தியிருந்தார்.

டோலிவுட்

டோலிவுட்

பாலிவுட்டில் அறிமுகமான அமைரா தஸ்தூர் தமிழில் அநேகன் படத்தில் நடித்திருந்த நிலையில், டோலிவுட்டில் இயக்குநர் மஞ்சுளா கட்டாமனேனி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான மனசுக்கு நச்சிந்தி படத்தில் நாயகியாக நடித்தார். தொடர்ந்து, ராஜ் தருண் நடிப்பில் வெளியான ராஜு காடு படத்திலும் அமைரா நடித்திருந்தார்.

ஜாக்கி சானுடன்

ஜாக்கி சானுடன்

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி வந்த அமைரா தஸ்தூர், நடிகர் ஜாக்கி சான் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான குங்ஃபூ யோகா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஆக்‌ஷன் அவதாரில் கலக்கி இருந்தார். அந்த படத்தில் ஜாக்கி சானுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தானத்துடன்

சந்தானத்துடன்

அநேகன் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான ஓடி ஓடி உழைக்கணும் படத்தில் நாயகியாக அமைரா தஸ்தூர் நடித்து வந்தார். ஆனால், அந்த படத்தின் ஷூட்டிங் பாதியிலே நிறுத்தப்பட்டு கிடப்பில் கிடக்கிறது. மேலும், காதலை தேடி நித்யானந்தா எனும் தமிழ் படத்திலும் கமீட் ஆகி இருக்கிறார்.

படு கவர்ச்சி

படு கவர்ச்சி

நடிகை அமைரா தஸ்தூரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 2 மில்லியன் ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். ஒர்க்கவுட் ஃப்ரீக்கான அமைரா யோகா செய்யும் புகைப்படங்களையும், படு கவர்ச்சியான போட்டோக்களையும் பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X