Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஹேப்பி பர்த்டே அஞ்சலி..நண்பர்கள்.. திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து !
சென்னை : கொஞ்சும் அழகாலும் அசரவைக்கும் நடிப்பாலும் தமிழில் கற்றது தமிழ் படத்தின் மூலம் தொடங்கி சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பல லட்சம் மக்களின் மனதை கொள்ளையடித்து வரும் நடிகை அஞ்சலி இன்று தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
இவர் ஜூன் 16 ஆனா இன்று தனது 34 ஆவது பிறந்தநாளை வெகுவிமர்சையாக தனது வீட்டில் கொண்டாடி வருகிறார்.
மேலும் இவருக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இது ரீல் இல்ல ரியல்.. நிர்வாண கோலத்தில் பிரபல நடிகை.. சினிமா மீது இவ்வளவு காதலா?
பெற்றது பெயர்
தமிழில் கற்றது தமிழ் என்கிற தமிழ் எம்ஏ படத்தின் மூலம் அறிமுகமான அஞ்சலி. நடித்த முதல் படத்திலேயே ஆழமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களை கொள்ளை கொண்டது மட்டுமல்லாமல் பல விருதுகளையும் அதற்காக தட்டிச் சென்றார். மேலும் இந்த படத்தில் நடிகர் ஜீவாவுடன் ஆனந்தி என்ற அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு அதற்காக பல விருதுகளும் வழங்கப்பட்டது. இயக்குநர் ராம் இயக்கிய இந்தப் படம் தமிழ் சினிமாவில் இன்றளவும் பலரது விருப்ப படமாக இருக்கின்றது.
சவாலான கதாபாத்திரம்
தான் நடித்த முதல் படத்திலேயே சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவர் அதற்கடுத்து நடித்த அடுத்தடுத்த படங்களில் கொஞ்சும் நடிப்பாலும் ரசிக்க வைக்கும் முக பாவனைகளிலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். கற்றது தமிழ் வெற்றியடைந்ததை தொடர்ந்து இவர் கன்னடம், தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். கற்றது தமிழ் எப்படி இவரது வாழ்க்கையை திருப்பி போட்டதோ அதேபோன்று இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித்தெரு இவர் வாழ்க்கையில் மற்றுமொரு முக்கிய படமாகும்.
காதல் காட்சிகளில் உருகும்
அங்காடித்தெரு படத்தில் கனி என்ற கதாபாத்திரத்தில் முதல்பாதியில் துறுதுறுப்பும் அட்டகாசங்களும் செய்யும் பெண்ணாகவும் இரண்டாம் பாதியில் காதல் காட்சிகளில் உருகும் வகைகள் நடித்து அனைவரையும் கவர்ந்தார். மேலும் அங்காடித்தெரு திரைப்படத்திற்காக இவர் தமிழ்நாடு மாநில விருது, விஜய் அவார்ட்ஸ் என பல விருதுகளை பெற்றார். இவ்வாறு இவர் நடித்த அனைத்து படங்களிலும் தனது கதாபாத்திரத்தை அழுத்தமாக பேச வைத்து தனது வெற்றி பயணத்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
நெஞ்சை கொள்ளையடித்தார்
அஞ்சலி முதன்முதலில் நடிகர் ஜெய்யுடன் இணைந்து நடித்த படம் எங்கேயும் எப்போதும். காதலர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் மிகவும் கவர்ந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரி குவித்தது. அறிமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் இரண்டு காதலர்களை மையமாக வைத்து பயணிக்கும் இந்த கதையில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மேலும் பல அன்பான ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை அடித்தார்.
சூப்பரான ஜோடி
எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து பல லட்சம் மக்களின் மனதை கொள்ளை அடித்தது போன்று நடிகர் ஜெய்யின் மனதையும் இவர் இந்த படத்தில் கொள்ளை அடித்தார். இந்தப் படத்திற்குப் பின் இருவரும் காதலர்களாக சுற்றி வருகின்றனர் என செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கையில் அதை இவர்கள் இருவரும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும் இது உண்மையாக இருந்தால் நிச்சயமாக இது ஒரு சூப்பர் ஜோடி என பலரும் சொல்லிவந்தனர். இப்படி இவர்களை பற்றி கிசுகிசுத்து வரும் வேளையில் இவர்கள் இருவரும் மீண்டும் பலூன் என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர்.
சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி
பல விருதுகளுக்கு பெயர்போன கொஞ்சும் வண்ண குயில் அஞ்சலி பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவர், இயக்குனர் ராம் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து பேரன்பு என்ற படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடித்தார். இந்த படம் வெளியாவதற்கு முன்பே பல விருதுகளையும் பாராட்டையும் பெற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் இவருக்கு மேலும் பல விருதுகளை பெற்று தந்தது.
இன்று பிறந்த நாள்
எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக தன்னைப் பொருத்திக்கொண்டு வெற்றி நாயகியாக இன்றும் வலம் வரும் அஞ்சலி ஜூன் 16ஆம் தேதியான இன்று தனது 34வது பிறந்த நாளை அவரது குடும்பத்தாருடன் வெகு விமர்சியாக கொண்டாடி வருகிறார். மேலும் இவரின் பிறந்தநாளுக்கு, நண்பர்கள், ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி மகிழ்வித்து வருகின்றனர்.