காந்தக் கண்ணழகி .. அனு இம்மானுவேலுக்கு..இவ்வளவு வயசாய்ருச்சா..விழுந்து விழுந்து வாழ்த்தும் ரசிகர்கள்

சென்னை : காந்த கண்ணழகி அனு இமானுவேல் இன்று தனது 24வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தவர் அனு இமானுவேல்

தமிழ், மலையாளம் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக

குழந்தை நட்சத்திரமாக

மலையாள திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப்படத்தில், ஜெயராம் மற்றும் சாமுருதா சுனில் ஆகியோரி மகளாக நடித்தார். அதன் பின் நிவின்பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் கதாநாயகியாக நடித்தார்.

அறிமுகத்தை கொடுத்தார்

அறிமுகத்தை கொடுத்தார்

தெலுங்கில் தனது கால் தடத்தை பதித்த அனு, நானியுடன் மஞ்சு என்ற படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு, சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றுத்தந்தது. மேலும், கிட்டு உன்னாடு ஜாக்ரதா, ஆக்ஸிஜன் , நா பேரு சூர்யா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நம்மவீட்டுப்பிள்ளை

நம்மவீட்டுப்பிள்ளை

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். அந்த படம் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமையவில்லை. இதையடுத்து, சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டுபிள்ளை படத்தில் நடித்தார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுத்தந்தது.

கதைகளை கேட்டு

கதைகளை கேட்டு

தமிழ்ல் இவர் நடித்தது என்னமோ இரண்டு படங்கள் நான் என்றாலும், பெரும் ரசிகர்களின் ஆதரவை பெற்றுவிட்டார். மேலும் சினிமாவில் உச்சத்தை தொட வேண்டும் என்பதற்காக தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கதைகளை கேட்டு வருகிறார்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

1997ம் ஆண்டு அமெரிக்காவில் டெக்சாசில் பிறந்த, காந்த கண்ணழகி அனு இமானுவேல் இன்று தனது 24வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X