அம்மா, தங்கை, ஹீரோயின் எந்த கேரக்டர் கொடுத்தாலும் பிச்சு உதறும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஹேப்பி பர்த்டே!.

சென்னை: அம்மா, தங்கச்சி, ஹீரோயின், பொண்ணு என எந்த கேரக்டர் கொடுத்தாலும் தனது நடிப்பால் பிச்சு உதறும் சென்னை பொண்ணு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்று பிறந்தநாள்.

ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவருக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ட்விட்டரில் #HBDAishwaryaRajesh உருவாக்கப்பட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களால் டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

சாதாரண காய்ச்சலுக்கே 1லட்சம் புடுங்கிட்டாங்க Actress Aishwarya Rajesh Speech At Mei Movie Press Meet

வயசு

வயசு

1990ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி சென்னையில் பிறந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்றுடன் 30 வயது நிறைவடைகிறது. தமிழ் சினிமாவில் நல்ல திறமையான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், எந்த ரோலில் நடித்தாலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

தங்கை

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார். சன் பிக்சர்ஸ் சார்பாக தற்போது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேலன்ட்

ஐஸ்வர்யா ராஜேஷ் டேலன்ட்டான நடிகை என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமின்றி இந்தியளவில் சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த விஷயம் தான். தமிழ் படங்களை தாண்டி தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சின்னத்திரை

டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் ஷோ மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ், தென்னிந்திய நடிகையாக உயர்ந்திருப்பது அவரது திறமைக்கும் முயற்சிக்குமான பரிசு என ஹரிச்சரன் பதிவிட்டுள்ளார்.

சிரிப்பழகி

ஸ்மைலிங் பியூட்டி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஹேப்பி பர்த்டே, உங்களுடைய அடுத்த அடுத்த படங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் என இந்த ரசிகர் ட்வீட் போட்டு வாழ்த்தியுள்ளார்.

கெளசல்யா முருகேசன்

கனா படத்தில் கெளசல்யா முருகேசனாக கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

எஸ்கே ரசிகர்கள்

சிவகார்த்திகேயனுடன் கனா, நம்ம வீட்டு பிள்ளை என இரு படங்களில் தொடர்ந்து நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

துல்கர் ஃபேன்ஸ்

மலையாள நடிகர் துல்கர் சல்மானுடன் ஜோமோண்டே சுவிசேஷங்கள் படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். துல்கர் சல்மான் ரசிகர்களும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஹேப்பி பர்த்டே

ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

துருவ நட்சத்திரம்

சியான் விக்ரமின் சாமி 2 படத்தில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் சின்ன ரோலில் நடித்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படத்திலும் விக்ரமுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நடித்து வருகிறார். அவருக்கு விக்ரம் ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துகள் குவிகின்றன.

பத்மா

வடசென்னை பத்மாவ தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் மறக்கவே மாட்டார்கள். வடசென்னை பொண்ணுக்கான அத்தனை அம்சங்களுடன் அந்த கெட்ட வார்த்தை வசனங்களையும் அப்படியே பேசி தனுஷுக்கே டஃப் கொடுத்த கோவிந்தமா பத்மாவுக்கு ஹேப்பி பர்த்டே என தனுஷ் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X