புரியாத புதிர் காயத்ரிக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தில் குவியும் வாழ்த்து!
சென்னை : புரியாத புதிர் நாயகி காயத்ரி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
ப்ப்பா....யார்ரா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கா! என்ற விஜய் சேதுபதியின் வசனம் மிகவும் பிரபலம் ஆனால் உண்மையில் அந்த பெண் கொள்ளை அழகு கொண்டவராய் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அவர் தான் காயத்ரி!

பல ஹீரோயின்களை அடிக்கடி நாம் திரைப்படங்களில் பார்த்தும் பெயர் அறியப்படாமல் இருப்பார்கள், அட நல்லா நடிக்குது பா இந்த பொண்ணு என்று சொன்னாலும் நிறைய படங்களில் பார்க்க முடியாது. அப்படிப்பட்டவர் தான் நம் காயத்ரி. க்யூட்டான சிரிப்பும் ஹோம்லி லுக்கும் இவரின் பாசிட்டிவிட்டி. இவருக்கு என்று ஒரு தனி ஆடியன்ஸ் உண்டு.

பெங்களூரில் வளர்ந்தாலும் தமிழ் குடும்பத்தை சார்ந்த பெண்தான், 2012 ஆம் ஆண்டு 18 வயசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் பல திரைப்படங்களில் ஹீரோயினாகவும் முக்கிய கதாபாத்திரமாகவும் நடித்திருப்பார்.
இவர் நடித்த படங்களில் சூப்பர் டீலக்ஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்றவை குறிப்பிடத்தக்கது. அவரின் ஹோம்லி லுக் நம் பக்கத்து வீட்டு பெண் போலவே இருக்கும்.

Recommended Video
நல்ல நடிப்பு திறமை உள்ள இவருக்கு இன்னும் பெரிய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது. இவரின் பிறந்தநாளான இன்று வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. லாக் டவுன் சமயத்தில் பிறந்த நாள் காணும் எல்லா பிரபலங்களும் மிகவும் சந்தோஷமாக குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள். காயத்ரியும் அது போலே குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாட வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications











