ஹாப்பி பர்த்டே நயன்தாரா..பிரபலங்கள் வாழ்த்து..பிறந்தநாள் பரிசாக நெற்றிக்கண் டீசர் அவுட்!

சென்னை : தடைகள் பல தாண்டி இன்று எல்லோரும் வியந்து பார்க்கும் உச்சத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்கும் நடிகை நயன்தாரா தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய மிக முக்கியமான நடிகை ஆவார்.

Recommended Video

Netrikan korean படத்தோட Remake? | Vignesh Shivan, Nayanthara | Filmibeat Tamil

ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் லீட் ரோலில் நடித்து பாக்ஸ் ஆபீசை தெறிக்க வைக்க முடியும் என நிரூபித்து காட்டியவர்.

இவ்வாறு பலரும் வியந்து பார்க்கும் உச்சத்தில் இன்று ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா நவம்பர் 18 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை யொட்டி திரைப்பிரபலங்கள் பலரும் காமன் டிபியை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், ரசிகர்கள் ஒருபுறம் இணையத்தில் வாழ்த்துக்களை தெறிக்க விட மறுபுறம் பிறந்தநாள் பரிசாக நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் வெளியாகி சக்கை போடு போடுகிறது.

ரசிகர்கள் கூட்டத்தை

ரசிகர்கள் கூட்டத்தை

தமிழ் சினிமாவை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகைகள் ஆட்டிப்படைத்து பெரும் ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருந்த நிலையில் இப்பொழுது அனைவராலும் ரசிக்கப்படுபவராக நடிகை நயன்தாரா இருந்து வருகிறார்.

ஐயா

ஐயா

அதிரடி இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான "ஐயா" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நயன்தாரா அதற்க்கு முன்பாகவே மலையாளத்தில் வெளியான "மனசினக்கரே" என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

நீச்சல் உடையில்

நீச்சல் உடையில்

நடிப்பில் மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் பின்னி பெடலெடுக்கும் நயன்தாரா பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களில் நீச்சல் உடையில் வந்து ரசிகர்களை கிறங்க வைத்ததோடு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல பாராட்டுகளைப் பெற்றார்.

லேடி சூப்பர் ஸ்டாராக

லேடி சூப்பர் ஸ்டாராக

மற்ற நடிகைகளைப் போல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துவந்த நயன்தாரா "மாயா" என்ற ஹாரர் திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார்.

அற்புதத்தை நிகழ்த்தி

அற்புதத்தை நிகழ்த்தி

நயன்தாராவை பின்தொடர்ந்து இப்பொழுது பல நடிகைகளும் லீட் ரோலில் நடிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் அதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்த நடிகை நயன்தாரா மாயா திரைப்படத்தை தொடர்ந்து டோரா, அறம், கோலமாவு கோகிலா, ஐரா, கொலையுதிர் காலம், மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் நெற்றிக்கண் என தொடர்ந்து பல லீட் ரோல் கதாபாத்திரங்களைக் கொண்ட திரைப் படங்களை தேர்ந்தெடுத்து பாக்ஸ் ஆபீஸில் பல அற்புதத்தை நிகழ்த்தி வருகிறார்.

தொடர் காதல் முறிவு

தொடர் காதல் முறிவு

இது மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இன்று அசைக்கமுடியாத உச்ச நடிகையாக வளர்ந்து இருக்கும் நடிகை நயன்தாரா ஆரம்ப காலத்தில் பல்வேறு சர்ச்சைகள், தொடர் காதல் முறிவு, தொடர் தோல்விகள் என அனைத்தையும் சந்தித்து பக்குவப்பட்டதோடு அதிலிருந்து மீண்டு இப்பொழுது பலரும் வியந்து பார்க்கும் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.

பிறந்தநாள் பரிசாக

பிறந்தநாள் பரிசாக

சினிமாவில் இன்று லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கும் நடிகை நயன்தாரா நவம்பர் 18 ஆம் தேதியான இன்று பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி பிரபலங்கள் பலரும் பர்த்டே காமன் டிபியை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் இவரது ரசிகர்கள் இணையதளத்தை வாழ்த்துக்களால் தெறிக்க விட்டு வருகின்றனர். அதே சமயம் இவரின் நெற்றிக்கண் படக்குழு இன்று பிறந்தநாள் பரிசாக டீசரை வெளியிட்டுள்ளது.

ரத்தம் சொட்டச்சொட்ட

ரத்தம் சொட்டச்சொட்ட

நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கும் "நெற்றிக்கண்" திரைப்படத்தின் டீசர் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் அதில் நயன்தாரா கண்பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். பாவப்பட்ட ஆடு மற்றும் தந்திர நரி கதையை கூறியவாறு ஆரம்பிக்கும் இந்த டீசரில் ரத்தம் சொட்டச்சொட்ட பல காட்சிகள் நிரம்பியிருக்க "அவள்" திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். பயமுறுத்தும் பல காட்சிகள் இடம் பெற்றுள்ள இந்த நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா ஆக்ஷனிலும் கலக்கி உள்ளார். இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த டீசர் இப்பொழுது இணையதளத்தில் சக்கை போடு போடுகிறது,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X