பிக் பாஸ் லாஸ்லியாவுக்கு பிறந்தநாள்.. லியா பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான லாஸ்லியா மரியநேசனின் 25வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் வெள்ளந்தியான மனசை பார்த்த ரசிகர்கள் அவருக்கு மிகப்பெரிய ஆர்மி ஆரம்பித்து தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகை லாஸ்லியா பற்றி பலரும் அறியாத சில சுவாரஸ்ய தகவலை இங்கே பார்ப்போம்.

லாஸ்லியா பிறந்தநாள்

1996ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி இலங்கையில் பிறந்த லாஸ்லியா இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிக் பாஸ் பிரபலம், நடிகை என கோலிவுட்டில் கலக்கி வரும் லாஸ்லியாவின் பிறந்த நாளை ரசிகர்கள் #HBDLosliyaMariyanesan என்கிற ஹாஷ்டேக்கை போட்டு டிரெண்ட் செய்து வாழ்த்தி வருகின்றனர்.

லாஸ்லியாவின் ஆசை

லாஸ்லியாவின் ஆசை

சிறு வயது முதலே லாஸ்லியாவுக்கு செய்தி வாசிப்பாளர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்ட லாஸ்லியா, பள்ளி படிப்பை முடித்த உடனே மீடியாவுக்குள் செய்தி வாசிப்பாளராக நுழைந்து தனது லட்சியத்தை அடைந்து விட்டார்.

முயற்சி செய்ய பிடிக்கும்

முயற்சி செய்ய பிடிக்கும்

புதிய விஷயங்களை எப்போதுமே முயன்று பார்க்க லாஸ்லியாவுக்கு ரொம்பவே பிடிக்கும். அப்படி முயற்சி செய்து தான் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டு நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கினார் லாஸ்லியா. பிக் பாஸை தொடர்ந்து அடுத்த கட்டமாக கோலிவுட் ஹீரோயினாகவும் அசத்தி வருகிறார்.

பிடித்த இடம்

பிடித்த இடம்

நடிகை லாஸ்லியாவுக்கு எப்போதுமே தனது சொந்த ஊரான திருகோண மலை தான் ரொம்ப பிடித்த இடமாம். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சட்டென இலங்கைக்கு கிளம்பி திருகோணமலைக்கு சென்று விடுவதை வழக்கமாக கொண்டு உள்ளாராம் லாஸ்லியா.

பிடித்த நடிகர்கள்

பிடித்த நடிகர்கள்

பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் தான் ரொம்ப ஃபேவரைட்டாம். தளபதி விஜய்யுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும் தெரிவித்துள்ளார் லாஸ்லியா.

ஆண்ட்ரியாவை பிடிக்கும்

ஆண்ட்ரியாவை பிடிக்கும்

ஹீரோக்கள் லிஸ்ட் அப்படி இருக்க, ஹீரோயின்களில் லாஸ்லியாவின் தேர்வு யார் தெரியுமா? போல்டான கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகை ஆண்ட்ரியா தான் லாஸ்லியாவுக்கு பிடித்த நடிகையாம். ஆயிரத்தில் ஒருவன், தரமணி உள்ளிட்ட படங்களை ஆண்ட்ரியா நடிப்புக்காகவே பல முறை பார்த்துள்ளாராம்.

பிடித்த உடை

பிடித்த உடை

வெள்ளை நிறம் என்றால் லாஸ்லியாவுக்கு ரொம்பவே பிடிக்கும். டார்க் நிறங்களை விட லைட் கலர் ஆடைகளையே பெரிதும் விரும்பி அணிந்து வருகிறார் லாஸ்லியா. மாடர்ன் உடைகளை விட பாரம்பரியமான சேலை அணிவது தான் தனக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று என்றும் லாஸ்லியா கூறியுள்ளார்.

இன்னொரு பெயரும் இருக்கு

இன்னொரு பெயரும் இருக்கு

லாஸ்லியாவை ரசிகர்கள் செல்லமாக லியா என அழைப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அவரது வீட்டில் லாஸ்லியாவை இன்னொரு பெயர் வைத்தும் அழைப்பார்களாம். அது என்ன பெயர் என்றால் பிரியங்காவாம். பிரியங்கா என்றும் பிங்கி என்றும் அழைத்தால் லாஸ்லியாவுக்கு ரொம்பவே பிடிக்குமாம். மேலும், லாஸ்லியா நல்ல சாப்பாட்டு பிரியரும் கூடவாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X