கொச்சியில் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாரா
கொச்சி: நடிகை நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கேரளாவில் குடும்பத்தோடு கொண்டாடுகிறார்.
கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா மலையாள படமான மனசினகரேவின் மூலம் நடிகை ஆனார். அவர் நடித்த முதல் படமே ஹிட்டானது. இதையடுத்து மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தான் இயக்குனர் ஹரியின் கண்ணில் நயன்தாரா பட்டார்.

ஐயா
சரத்குமார் நடித்த ஐயா படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக்கினார் ஹரி. நயனை கோலிவுட்டுக்கு அழைத்து வந்த பெருமை ஹரியை சேரும்.

ரஜினி
முதல் படத்தில் சரத்குமாருடன் நடித்த நயன் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியானார். முதல் இரண்டு படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் வந்த நயன் அடுத்ததாக கவர்ச்சிக்கு தாவினார். அவர் மம்மூட்டி, மோகன்லால், அஜீத், விஜய், வெங்கடேஷ் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

அடுத்தடுத்து 2 ஹிட்
நயன்தாரா ஆர்யாவுடன் சேர்ந்து நடித்த ராஜா ராணி, அஜீத்துடன் நடித்த ஆரம்பம் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகி ஹிட்டாகியுள்ளன. இதையடுத்து நயன் நடித்துள்ள இந்தி படமான கஹானியின் ரீமேக்கான அனாமிகா அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது.

பிறந்தநாள்
நயன்தாரா இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாட அவர் கொச்சிக்கு சென்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











