பாலிவுட் கனவுக்கன்னி ரேகா: சில நினைவலைகள்

By Mayura Akilan

பாலிவுட் உலகின் கனவுக்கன்னி இன்றைக்கும் அழகில் அவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்று ஊடகங்கள் வர்ணிக்கும் அழகி ரேகா. அக்டோபர் 10ல் பிறந்தநாள் கொண்டாடிய ரேகா 58 வயதை பூர்த்தி செய்துள்ளார். இதேநாளில்தான் 'பிக் பி' என்று அழைக்கப்படும் அமிதாப்பச்சனின் பிறந்ததினம் மும்பையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற இந்த கொண்டாட்டத்தில் ரேகா பங்கேற்றவில்லை. ஆனாலும் அமிதாப்பச்சன் - ரேகா ஜோடி 70களில் பிரபலமாக பாலிவுட்டை கலக்கியது. ரேகாவின் வாழ்வில் நடைபெற்ற சில சுவையான சம்பவங்களை அவர் பிறந்தநாள் கொண்டாடும் இந்த வேளையில் நினைவு கூர்வோம்.

காதல் மன்னன் மகள் கனவுக்கன்னி

காதல் மன்னன் மகள் கனவுக்கன்னி

தமிழ்சினிமாவில் பிரபலமாக திகழ்ந்த காதல் மன்னன் ஜெமினிகணேசனுக்கும் தெலுங்கு நடிகை புஷ்பவள்ளிக்கும் மகளாகப் பிறந்த ரேகா 40 ஆண்டுகால திரை வாழ்க்கையில் 180 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கனவுக்கன்னியாகவும் கவர்ச்சி நாயகியாவும் திகழ்ந்தார்.

1966 ல் தொடங்கிய திரைப்பயணம்

1966 ல் தொடங்கிய திரைப்பயணம்

1966ல் ரங்குலா ரத்னம் என்ற தெலுங்கு திரைப்படத்தில்தான் ரேகாவின் திரைப்பயணம் தொடங்கியது. 1970களில் பாலிவுட் உலகில் கால்பதித்த ரேகா 1976ல் அமிதாப்பச்சன் நடித்த தோ அஞ்சானே திரைப்படத்தில் துணை நட்சத்திரமாக நடித்தார். இதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.

அமிதாப் -ரேகா கெமிஸ்ட்ரி

அமிதாப் -ரேகா கெமிஸ்ட்ரி

1978ல் அமிதாப்பச்சனுடன் முக்குவாதர் கா சிக்கந்தர் படத்தில் நடித்தார் ரேகா. பாலிவுட் உலகில் இந்த ஜோடி மிகப்பெரிய வெற்றி ஜோடி என்ற பெயர் பெற்றது. சினிமாவில் மட்டுமல்ல நிஜவாழ்க்கையிலும் இந்த ஜோடியைப் பற்றி பல கிசுகிசுக்கள் எழுந்தன. ஜெயபாதுரியை திருமணம் செய்த பின்னரும் ரேகா உடன் அமிதாப் சுற்றித் திரிந்தது பெரும் விமர்சனத்திற்குள்ளானது.

அமிதாப் காதலுக்கு முற்றுப்புள்ளி

அமிதாப் காதலுக்கு முற்றுப்புள்ளி

1981ல் அமிதாப் - ரேகாவின் உறவிற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. அமிதாப்பச்சனுடனான உறவு தோல்வியடைந்த பின்னர் ரேகாவின் திரைவாழ்க்கையே மாறியது. அதற்குப்பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை

தேசிய விருது நாயகி

தேசிய விருது நாயகி

ரேகா தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் அனைத்துமே பெரும் விமர்சனத்திற்குள்ளானவை, விலைமகள்,மனவளர்ச்சி குன்றிய பெண் போன்ற கதாபாத்திரங்கள் ரேகாவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன. கிட்டத்தட்ட 180 படங்களில் தனக்கென தனிபாணியில் நடித்து புகழ்பெற்றார் ரேகா. விலைமகளாக நடித்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது

சோகத்தில் முடிந்த திருமண வாழ்க்கை

சோகத்தில் முடிந்த திருமண வாழ்க்கை

1990ம் ஆண்டு முகேஷ் அகர்வால் என்ற தொழிலதிபரை ரேகா திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த நேரத்தில் ரேகா அமெரிக்காவில் இருந்தார். 1973ம் ஆண்டு நடிகர் வினோத் மெஹ்ராவை அவர் திருமணம் செய்து கொள்வதாக வதந்தி பரவியது. ஆனால் 2004ம் ஆண்டு தொலைக்காட்சி ஒன்றிர்க்கு பேட்டியளித்த ரேகா, வினோத் மெஹ்ரா தன்னுடைய நலம் விரும்பி என்று கூறினார். திருமணம் செய்து கொள்வதாக அப்போது வெளியான செய்திகள் யாவும் வதந்திதான் என்றும் கூறினார்.

மவுசு குறையாத கனவுக்கன்னி

மவுசு குறையாத கனவுக்கன்னி

1990களில் மாதுரி தீக்சித், ஸ்ரீதேவி வருகைக்குப் பின்னர் படிப்படியாக பாலிவுட் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அவருடன் நடித்த நடிகைகள் அக்கா, அம்மா கதாபாத்திரங்களில் நடித்தாலும் ரேகா கதாநாயகியாகவே நடித்தார். சினிமாவில் அவருக்கு வாய்ப்பு குறைந்தாலும் 1990களில் அவர் நடித்த காமசூத்ரா, எ டேல் ஆப் லவ், கிலாடியான் கா கிலாடி போன்ற படங்கள் விமர்ச்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன. பின்னர் துணை கதாபாத்திரங்களில் நடித்த அவர் 2010ம் ஆண்டு சாதியான் படத்துடன் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

ஜெயாபச்சன் எதிரே ரேகா

ஜெயாபச்சன் எதிரே ரேகா

ரேகா தற்போது மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் உறுப்பினராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது கேமராவின் கண்கள் அங்கு அமர்ந்திருந்த ஜெயாபச்சனைத்தான் அடிக்கடி காண்பித்தன. ஜெயாபச்சனுக்கு சில இருக்கைகள் தள்ளியே ரேகாவிற்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. ஊடகங்களில் இரு பரபரப்பாக பேசப்பட்டது.

பரபரப்பை ஏற்படுத்திய பிறந்தநாள்

பரபரப்பை ஏற்படுத்திய பிறந்தநாள்

ரேகாவின் பிறந்தநாள் அக்டோபர் 10 அமிதாப்பச்சனின் பிறந்தநாள் அக்டோபர் 11. அமிதாப்பச்சன் 70 வயதை பூர்த்தி செய்துள்ளார். ரேகா 58 வயதை பூர்த்தி செய்துள்ளார். இவர்கள் இருவரும் நாளில் அதாவது அக்டோபர் 10ம் தேதி வெகு சிறப்பாக பிறந்தநாளை கொண்டாடியதுதான் ஊடகங்களில் இன்றைக்கு ஹாட் டாபிக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X