மலர் டீச்சர் டு மாரி வைஃப்.. திறமையான நடிகை சாய் பல்லவி.. டிரெண்டாகும் #HappyBirthdaySaiPallavi
சென்னை: பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்து தென்னிந்திய இளைஞர்களின் மனங்களை கொள்ளைக் கொண்ட நடிகை சாய் பல்லவியின் 28வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
Recommended Video
மலர் டீச்சரை மறக்கடிக்க செய்யும் விதமாக தனுஷின் மாரி படத்தில் ஆட்டோ ஆனந்தியாக வூடு கட்டி நடித்திருப்பார் சாய் பல்லவி.
தென்னிந்திய நடிகைகளிலேயே திறமையான நடிகைகளில் சாய் பல்லவிக்கும் தனி இடம் உண்டு. இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வரும் அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்ப் பொண்ணு
பிரேமம் படத்தில் நாயகியாக அறிமுகமானதால் சாய் பல்லவியை பலரும் கேரள நடிகையாக நினைத்திருப்பார்கள். ஆனால், அதுதான் இல்லை. தமிழ்நாட்டின் கோத்தகிரியில் 1992ம் ஆண்டு மே 9ம் தேதி பிறந்தவர் நடிகை சாய் பல்லவி. நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்த சாய் பல்லவி உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தாம் தூம்
பிரேமம் படத்திற்கு முன்னதாகவே தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் மற்றும் கஸ்தூரி மான் உள்ளிட்ட படங்களில் சைடு ரோலில் நடித்திருப்பார். 2008ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, ஈ டிவி தெலுங்கில் ஒளிபரப்பான தீ அல்டிமேட் டான்ஸ் ஷோவிலும் கலந்து கொண்டார்.

மலர் டீச்சர்
தனது நடனத் திறமையை நிரூபிக்க போராடிக் கொண்டிருந்த சாய் பல்லவிக்கு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கிடைத்தது. நிவின் பாலி உடன் இணைந்து அந்த படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு இந்திய அளவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. சென்னையிலேயே பிரேமம் திரைப்படம் 200 நாட்களை கடந்து ஓடியது குறிப்பிடத்தக்கது.

மாரி 2
துல்கர் சல்மானுடன் கலி படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு, தெலுங்கில் ஃபிடா, மிடில் கிளாஸ் அப்பாயி உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பேய் படமான தியா படத்தில் நடித்திருந்தார். ஆனால், அவருக்கு தமிழில் நல்ல ஓப்பனிங் கொடுத்தது என்றால் அது தனுஷின் மாரி 2 படம் தான்.

டிரெண்டிங்
நடிகை சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு கோலிவுட், டோலிவுட் மற்றும் மலையாள திரையுலக ரசிகர்கள் #HappyBirthdaySaiPallavi என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். திறமையான நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து டிவீட்களை பதிவிட்டு வருகின்றனர்.

விஜய்சேதுபதி ரசிகர்கள்
மலர் டீச்சருக்கு மக்கள் செல்வன் ரசிகர்கள் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என விஜய்சேதுபதி ரசிகர்கள் டிவிட்டரில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். பிரபாஸ் ரசிகர்கள், நிவின் பாலி ரசிகர்கள், துல்கர் சல்மான் ரசிகர்களும் சாய் பல்லவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











