ஈரம் பட நாயகி சிந்து மேனனுக்கு இன்று பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை : தனது நடிப்பாலும் அழகாலும் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் கொடிகட்டி பறந்த சிந்து மேனன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

Recommended Video

Ayyappanum Koshiyum director Sachy Hospitalized | Cardiac Arrest

தமிழில் சமுத்திரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் மக்கள் அனைவருக்கும் பரிச்சயமானவர்.

அவரது பிறந்தநாளையொட்டி நண்பர்கள், ரசிகர்கள், திரைப்பட துறையை சேர்ந்தவர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

மெகா ஹிட்

மெகா ஹிட்

கன்னட திரைப்படத்தில் சைல்ட் ஆர்ட்டிஸ்டாக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த சிந்துமேனன் பின் படிப்படியாக தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்தார். தமிழில் சரத்குமார், முரளி, மனோஜ் பாரதிராஜா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த சமுத்திரம் என்ற மெகாஹிட் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் மக்கள் அனைவருக்கும் பரிச்சயமானவர். தமிழில் அறிமுகமான முதல் படமே மெகா ஹிட்டாக அமைந்த நிலையில் இந்த பெங்களூர் கிளி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர்

தேசிய விருது

தேசிய விருது

இவ்வாறு அறிமுகமான முதல் படத்திலேயே மாஸ் காட்டிய இவருக்கு அடுத்த படம் பாரதிராஜாவின் இயக்கத்தில் கடல் பூக்கள் என்ற அற்புதமான படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படமும் இவருக்கு கை கொடுத்து வெற்றி அடைந்தது, மேலும் இந்தப்படத்தின் திரைக்கதைக்காக பாரதிராஜா தேசிய விருதும் மேலும் நடிகர் முரளிக்கு சிறந்த நடிகருக்காக தமிழ்நாடு மாநில விருதும் கொடுக்கப்பட்டது.

விஜய்யுடன் கைகோர்த்து

விஜய்யுடன் கைகோர்த்து

இந்நிலையில் தமிழில் நடித்த இரண்டு படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சிந்துமேனன் பின் நம்ம இளைய தளபதி விஜய்யுடன் கைகோர்க்க வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் மெகா ஹிட்டான "சிரு நவ்வுதோ" படத்தை தமிழில் ரீமேக் செய்து யூத் என்ற பெயரில் உருவானது. விஜய் நடித்திருந்த யூத் படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து நல்ல பெயரும் பெற்றார். வின்சென்ட் செல்வா இயக்கிய இந்தப் படம் வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்து விஜய்யின் சினிமா கேரியரில் ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது இந்த படம். மேலும் இந்த படம் பாடல்கள்,காமெடி என அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

பிளாக்பஸ்டர்

பிளாக்பஸ்டர்

இவ்வாறு தமிழில் ஒரு சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் நடித்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பும் நல்ல பெயரும் நல்ல ஒரு புகழும் பெற்று தந்தது. யூத் படத்திற்கு பிறகு தமிழில் அவ்வளவாக கவனம் செலுத்தாமல் மலையாளப் படங்களில் நடித்து வந்த இவர் அங்கு அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிகட்டி பறந்தார் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் ஹீரோயினாக என்ட்ரி ஆகி ஈரம் என்ற ஒரு பிளாக்பஸ்டர் மூவியை யாரும் எதிர்பாராத வகையில் தனது அற்புதமான நடிப்பில் மூலம் கொடுத்திருந்தார்.

ரசிகர் கூட்டம்

ரசிகர் கூட்டம்

2009 ஆம் ஆண்டு காதல் மற்றும் திரில் கலந்த வித்தியாசமான கதைக்களத்துடன் வெளி வந்த ஈரம் படத்தின் மூலம் ஆதியுடன் முதன்முறையாக இணைந்தார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அறிவழகன் இருக்கியிருந்தார். மேலும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தின் போஸ்டர்கள் ட்ரெய்லர் வெளியான போது பயங்கரமான எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் இந்த படமும் பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மிக வெகுவாக பேசப்பட்ட நிலையில் "மழையே மழையே" பாடல் இன்றும் பலரது ப்ளே ஸ்டேஷனில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காகவே சிந்து மேனனுக்கு மேலும் ரசிகர் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.

இன்று பிறந்த நாள்

இன்று பிறந்த நாள்

இவ்வாறு தனது அழகாலும் நடிப்பாலும் பார்க்கும் நம் அனைவரையும் வசியம் செய்து வரும் சிந்துமேனனுக்கு இன்று பிறந்தநாள். இந்த அழகான பெங்களூர் கிளி ஜூன் 17ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதால் இவருக்கு ரசிகர்கள், நண்பர்கள், திரை துறை நண்பர்கள் என பலரும் தங்களது அன்பான வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X