ஹேப்பி பர்த்டே ஸ்வாதி..இணையத்தின் குவியும் வாழ்த்து ..!
சென்னை : சுப்ரமணியபுரம் நாயகி ஸ்வாதி ரெட்டி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் பலர் இணையம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்வாதி ரெட்டி. இவர் தெலுங்கில் நடிக்க துவங்கி பின் சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழில் நடிக்க ஆரம்பித்தவர். சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு இவர் பல தமிழ் படங்களில் நடித்து விட்டாலும் இன்றளவும் இவரின் டிரேட்மார்க் படம் என்றால் அது சுப்ரமணியபுரம் தான் .

தமிழில் முதல் படத்திலே சிறந்த நடிப்பு ,மெடுக்கான சிரிப்பு ,காந்த பார்வை என்று ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்வாதி.இதுவரையில் ஸ்வாதி எந்த ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்திலும் நடிக்காதது அதிகபடியான குடும்பங்களை இவரின் ரசிகர்களாக்கி இருக்கிறது.
இதற்கு பிறகு ஸ்வாதிக்கு தமிழில் மைல்கல் படம் என்றால் அது இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இதற்கு முன் அதிகபடியான படங்களில் பார்த்த கதாபாத்திரத்தில் தான் ஸ்வாதி நடித்திருந்தார் இருந்தும் ஸ்வாதியின் இயல்பான நடிப்பு இந்த படத்தையும் இவர் கதாபாத்திரத்தையும் பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இதன்பின் " வடகறி " மீண்டும் ஸ்வாதி ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு படம். இந்த படத்தில் வரும் நெஞ்சுக்குள்ள நீ பாடல் இன்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடலாகும். இன்றும் கூட ஸ்வாதி பிறந்நாளுக்கு வாழ்த்து கூற ரசிகர்கள் பெரும்பாலோனர் இந்த பாடலை தான் இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர் .
ஸ்வாதி பற்றி பலருக்கும் தெரியாத விஷயம் இவர் ரஷ்யாவில் பிறந்தவர். இவரின் சிறு வயது பெயர் ரஷ்ய மொழியில் தான் இருக்கும். ஸ்வாதியின் அப்பா நேவியில் பணியாற்றி வந்ததால் இவர் ரஷ்யாவில் பிறக்க நேரிட்டது . இதன்பின் ஸ்வாதி அப்பா இந்தியா திரும்ப ஸ்வாதி இந்தியாவில் படிக்கும் போது தனது ரஷ்ய பெயரான 'வெட்லேனா' என்ற பெயரை ஸ்வாதி என்று மாற்றிக்கொண்டார்.

ஸ்வாதி தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் இதுவரை நடித்திருக்கிறார். தென்னிந்திய ரசிகர்கள் பெரும்பாளோனர் இந்த நேரத்தில் ஸ்வாதிக்கு பிறந்தநாள் வாழ்த்தை இணையத்தின் வாயிலாக கூறி வருகின்றனர்.
Happy birthday swathi reddy


Click it and Unblock the Notifications











