Trisha Net Worth: 41 வயதிலும் நம்பர் ஒன்.. நிஜ குந்தவையாகவே வாழும் திரிஷா.. சொத்து மதிப்பு எவ்வளவு?

சென்னை: தென்னிந்தியாவின் குயினாகவே வாழ்ந்து வரும் நடிகை திரிஷாவுக்கு இன்று 41வது பிறந்தநாள். மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் அப்டேட் ஏதும் வரவில்லை. மே 4ம் தேதி திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டாவது அப்டேட் வருமா என அஜித் ரசிகர்கள் லைகா கதவை தட்டி வருகின்றனர். திரிஷாவுக்கு நிச்சயம் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் மட்டும் வரும் என தெரிகிறது.

பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2, லியோ என அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்த திரிஷா விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா என கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Happy Birthday Trisha Here we look about South Queen s luxurious life and net worth details

படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் குந்தவை ராணி போல தனி சாம்ராஜ்யத்தையே நடத்தி வரும் திரிஷாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

41 வயதிலும் நம்பர் 1: பிரவீன் காந்தி இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் தோழியாக வந்து போன திரிஷா இயக்குநர் அமீர் இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த மெளனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.1983ம் ஆண்டு மே 4ம் தேதி சென்னையில் கிருஷ்ணன் மற்றும் உமா தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர் திரிஷா. நயன்தாராவுக்கு தமிழில் தற்போது பெரிய படங்கள் இல்லாத நிலையில், கோலிவுட்டின் நம்பர் ஒன் இடத்தில் தற்போது திரிஷா தான் உள்ளார்.

குவியும் வாழ்த்துகள்: நடிகை திரிஷாவின் 41வது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். எனக்கு 20 உனக்கு 18 படத்தில் எப்படி க்யூட்டாக இருந்தாரோ அதே போல 41 வயதிலும் செம அழகாக இன்னமும் சிங்கிளாக இருந்து ரசிகர்களுக்காகவே வாழ்ந்து வருகிறார்.

திரிஷா சம்பளம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியானது. கமல்ஹாசனின் தக் லைஃப் மற்றும் சிரஞ்சீவியின் விஸ்வம்பரா படங்களில் நடிக்க 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். மாதம் 60 லட்சம் ரூபாயும் ஆண்டுக்கு 9 கோடி ரூபாய் வரை நடிகை திரிஷா விளம்பரங்கள், சினிமா படங்கள் மூலம் சம்பாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொகுசு பங்களா: நடிகை திரிஷாவுக்கு சொந்தமாக சென்னையில் 6 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா ஒன்று உள்ளது. அம்மா மற்றும் பாட்டி உடன் அந்த வீட்டில் தான் நடிகை திரிஷா வசித்து வருகிறார். ஆந்திராவிலும் திரிஷாவுக்கு ஒரு வீடு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பல ரியல் எஸ்டேட் சொத்துக்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார்.

கார்கள்: கோடிக் கணக்கில் கார்கள் மீது நடிகை த்ரிஷா முதலீடு செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கவில்லை. 60 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் எவோக், 63 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் இ கிளாஸ் மற்றும் 40 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ கார்களை திரிஷா வைத்துள்ளாராம்.

சொத்து மதிப்பு: அதிக பட்சமாக 85 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் திரிஷாவின் பெயரில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, ஐடென்டிடி என பல படங்களில் நடித்து வரும் திரிஷா சீக்கிரமே 100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கு அதிபதியாக வாய்ப்புகள் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X