நிஜ வாழ்க்கையில் என்னை யாருமே 'கலாய்ச்சி பை' பண்ணியதே இல்லைப்பா...ரம்யா நம்பீசன்!

சென்னை: நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ரம்யா நம்பீசன், சமீபத்தில் வெளியான பாண்டிய நாடு படம் மூலம் பாடகியாகவும் பிரபலமாகி விட்டார்.

ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், குள்ளநரிக் கூட்டம், பீட்சா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யாநம்பீசன். இவர் தற்போது டமால் டுமீல், ரெண்டாவது படம்,நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், முறியடி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

நடிப்பு மட்டுமின்றி ரம்யாநம்பீசன் சிறந்த பின்னணி பாடகியும் ஆவார். இவர் மலையாள படங்களில் நிறைய பாடல்கள் பாடி உள்ளார். தமிழில் விஷால் நடித்த பாண்டிய நாடு படத் தில் இவர் பாடிய 'பை பை பை கலாய்ச்சி பை' பாடல் ஹிட்டானதால் தமிழிலும் இவருக்கு பாடல் வாய்ப்புகளும் குவிகிறது.

இந்நிலையில், பாடகியாக வேண்டும் என்பதே தமது சிறு வயது கனவு எனத் தெரிவித்துள்ளார் ரம்யா நம்பீசன். மேலும், இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது :-

மகிழ்ச்சி....

மகிழ்ச்சி....

பை பை பை கலாய்ச்சி பை பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

நோ சான்ஸ்....

நோ சான்ஸ்....

நிஜ வாழ்க்கையில் என்னை யாரும் கலாய்த்தது இல்லை. அதற்கு நான் இடம் கொடுக்க மாட்டேன். கலாய்க்க வேண்டும் என்று நினைப்பவர்களை என் பக்கத்தில் கூட அனுமதிப்பது இல்லை.

பாடகி கனவு....

பாடகி கனவு....

பாடகியாக வேண்டும் என்பது என் சிறு வயது கனவாக இருந்தது. நடனம் ஆட வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். இதற்காக கர்நாடக சங்கீத வகுப்புக்கு சென்று பாட கற்றுக்கொண்டேன். நடனம் ஆடவும் கற்றேன்.

நடிகையானேன்...

நடிகையானேன்...

அது தான் என்னை சினிமாவுக்கு இழுத்து வந்தது. மலையாள படங்களில் பாடினேன். நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன. அதையும் ஏற்று நடிகையாகிவிட்டேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X