லீட் ரோல் கிடைக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு..மனம் திறந்த கருப்பு நிறத்தழகி சரண்யா

சென்னை : ஷார்ட் பிலிம்சில் நடிக்கும் நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்ற கனவு அதிகமாகவே இருக்கும்.

நிறம் குறைவாக இருந்தால் சினிமாவில் வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்கும் என்ற கோணம் இப்போது வெகுவாகவே குறைந்து இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

மாநிறமாக இருக்கும் நடிகைகளுக்கு இப்போது மவுசு அதிகமாகிவிட்டது.சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையிலும் நிறம் முக்கியம் இல்லை,திறமை தான் முக்கியம் என்று நிரூபித்து வருகிறார் சரண்யா ரவி.

ஷார்ட் பிலிம்ஸ்

ஷார்ட் பிலிம்ஸ்

பல சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த சரண்யாவுக்கு சமீப காலமாகவே பெரிய படங்களாக அமைந்து வருகிறது.அதற்கு காரணம் நிறத்தை விட திறமையை ரசிகர்கள் அதிகமாக விரும்புகின்றனர்.நிறத்தை காரணம் காட்டி கண்டுகொள்ளாமல் இருக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் திறமைக்கு வாய்ப்பு கொடுக்கும் இயக்குனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஷார்ட் பிலிம்ஸ் நடிப்பதில் பேர் போனவர் தான் சரண்யா.இப்போது வெள்ளித்திரையில் அதுவும் முக்கிய கதாபாத்திரங்களாக அமைந்து வருகின்றது.

ஜெயில் படம்

ஜெயில் படம்

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ்,அபர்ணதி, நடித்து வெளிவந்த படம் தான் ஜெயில்.இந்த படத்தில் ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சரண்யா.சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த சரண்யாவுக்கு சமீபகாலமாக வெள்ளை யானை,ஜெயில் போன்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனிமி இயக்குனர்

எனிமி இயக்குனர்

இவரது நடிப்பை பார்த்த எனிமி பட இயக்குனரும் தனது அடுத்தப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டுமே - தான் தேர்வு செய்வதாகவும், கூறியிருக்கிறார் சரண்யா.ஹிப் ஹாப் அதி படத்திலும்,சார்ம்சுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சரண்யா. சோசியல் மீடியா பக்கங்களில் சரண்யா நடித்த பல குறும்படங்கள் உணர்வு பூர்வமாகவும் மிகவும் தயிரியமான பல கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி உள்ளது. குறிப்பாக தமிழ் உச்சரிப்பு, சிங்கள் டேக் லென்தி ஷாட்ஸ் போன்றவைகள் மிகவும் பிரபலம் .

Recommended Video

தமிழில் முதல் Time Loop படம் இதுதான் | Actress Mirnalini Ravi Exclusive | Jango | Filmibeat Tamil
நல்ல வாய்ப்புகள்

நல்ல வாய்ப்புகள்

பல இயக்குனர்கள் தனது உழைப்பை ஆதரிப்பதாகவும்,வாய்ப்புகள் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்கள் என்று சரண்யா பல நெருங்கிய நண்பர்களிடம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார் .மேலும் அஜித் நடிப்பில் வெளிவர தயாராக இருக்கும் படமான வலிமை படத்திலும் சரண்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.வரும் படங்களில் இவரது கதாபாத்திரம் என்ன என்பதும்,இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கிறதா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X