அமுல்பேபி ஹன்சுவுக்கு ஹேப்பி பர்த்டே.. குவிகிறது வாழ்த்து மழை.. டிரெண்டாகும் #HappyBirthdayHansika
சென்னை: நடிகை ஹன்சிகாவின் 29வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
Recommended Video
குட்டி குஷ்பு போல தமிழ் சினிமாவில் கலக்கி வந்த நடிகை ஹன்சிகா, தற்போது ஸ்லிம் ஃபிட் மாடலாக மாறியுள்ளார்.
ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஹேப்பி பர்த்டே ஹன்சிகா
மும்பையில் ஆகஸ்ட் 9ம் தேதி 1991ம் ஆண்டு பிறந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஷகலக்கா பூம் பூம் எனும் டிவி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஹிரித்திக் ரோஷனின் கோய் மில் கயா படத்திலும் ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தேசமுத்ரு எனும் தெலுங்கு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான அவர், தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார்.
குவியும் வாழ்த்துக்கள்
தென்னிந்தியாவின் செல்லமாக கருதப்படும் நடிகை ஹன்சிகா மோத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய ரசிகர்கள் #HappyBirthdayHansika என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். ஹன்சிகா நடித்த படங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் என பல பதிவுகளை போட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து மான் கராத்தே படத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும், சிவகார்த்திகேயனுக்கு பொருத்தமான ஜோடியாகவும் செம க்யூட்டாக ஹன்சிகா அந்த படத்தில் நடித்திருப்பார். அதன் புகைப்படங்களை பதிவிட்டு, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இரண்டு படங்கள்
அதே போல தளபதி விஜய்யுடன் வேலாயுதம், புலி என இரு படங்களில் ஜோடி போட்டு நடிகை ஹன்சிகா நடித்திருப்பார். கோலிவுட்டின் பப்ளி கேர்ளான ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி விஜய் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு பிறந்தநாள் ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மஹா
சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது நடிகை ஹன்சிகாவுக்கும் சிம்புவுக்கும் காதல் மலர்ந்தது. ஆனால், பின்னர் அது பிரேக்கப்பில் முடிந்தது. ஆனாலும், தற்போது, மஹா படத்திற்காக இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சிம்புவுடன் அவர் இருக்கும் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஸ்லிம் பியூட்டி
கொழு கொழுவென குண்டாக இருந்த நடிகை ஹன்சிகா, தற்போது தீவிரமாக வொர்க்கவுட் செய்து தனது உடல் எடையை டோட்டலாக மாற்றி ஸ்லிம் பியூட்டியாக கலக்குகிறார். சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சைஸ் ஜீரோ புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்.


Click it and Unblock the Notifications











