நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பிறந்த நாள்.. குவிகிறது வாழ்த்து.. டிரெண்டாகும் #HappyBirthdayRashmika
சென்னை: கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாக உள்ள நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
Recommended Video
கீதா கோவிந்தம் படத்தில் வரும் இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே பாடலின் மூலம் இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆனார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
2020ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கு எவ்வரு படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

24 வயசு
கர்நாடக மாநிலத்தில் 1996ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி பிறந்த நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இன்றுடன் 24 வயதாகிறது. தனது 20 வயதிலேயே கன்னட படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின்றன.

100 கோடி கிளப்
2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமா உலகில் நாயகியாக என்ட்ரியான ராஷ்மிகா மந்தனா, 2018ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படம் 100 கோடி கிளப்பில் இணைந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
மகேஷ் பாபுவுடன்
தொடர்ந்து தேவதாஸ், யஜமானா, டியர் காம்ரேட் என தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் செம பிசியாக நடித்து வந்த ராஷ்மிகாவுக்கு ஜாக்பாட் அடித்தது போல, தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கெவ்வரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அந்த படம் 200 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில்
மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் உறுதி செய்யப்படுவதற்கு முன்னதாக ராஷ்மிகாவின் பெயர் தான் பலமாக அடிபட்டது. ஆனால், கடைசியில் அது நிறைவேறவில்லை. ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சுல்தான் படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.
குழந்தை ராஷ்மிகா
தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனாவின் 24வது பிறந்த நாளை கோலிவுட், டோலிவுட் மற்றும் சாண்டல்வுட் ரசிகர்கள் ஹாஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். ராஷ்மிகாவின் குழந்தைப் பருவ புகைப்படத்தை பதிவிட்டு இந்த தளபதி ரசிகர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் க்ரஷ்
இளம் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவின் க்யூட்னஸ் பல இளைஞர்களை அவர் மீது க்ரஷ் கொள்ள செய்துள்ளது. சுட்டித் தனத்துடன் குறும்பாக பேசி நடிக்கும் ராஷ்மிகாவின் சேட்டைகளை ரசிக்கும் இளைஞர்கள் தங்களது மொபைல் டிபிக்களிலும் ராஷ்மிகாவின் புகைப்படத்தை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











