அட்டகாசமான மஸில்ஸ்..வெறித்தனமான ஒர்க் அவுட்...ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் இளம் நடிகர் !
சென்னை : இளம் பெண்களின் மனதை கொள்ளையடித்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண் இப்பொழுது பிரியா பவானி சங்கருடன் இணைந்து ஓ மணப்பெண்ணே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவரின் சமீபத்திய திரைப்படங்களான தாராள பிரபு, இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் போன்றத் திரைப்படங்கள் வசூலில் கல்லா கட்டியது மட்டுமல்லாமல் இவருக்கான பெண் ரசிகைகளின் கூட்டத்தையும் அதிகரித்தது.
இவ்வாறு லவ்வர் பாயாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண் இப்போதெல்லாம் அடிக்கடி ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ஆக்ஷன் ஹீரோவாக மாற உள்ளதை தெரியப்படுத்தும் வகையில் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் கவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

காதல் மன்னனாக
பார்த்தவுடனேயே பற்றிக் கொள்ளும் லட்சணமான தோற்றம், கச்சிதமான நடிப்பு என தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாண் இப்பொழுது காதல் மன்னனாக வலம் வர இவருக்கான ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே போகிறது.

இவரின் மார்க்கெட்டும்
அஜித்குமார், மாதவன், அரவிந்த் சாமி போன்ற நடிகர்களின் வரிசையில் லவ்வர் பாயாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண் சமீபகாலமாக காதல் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் பியார் பிரேமா காதல், இஸ்பேட்ராஜாவும் இதயராணியும், தாராள பிரபு போன்றத் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற இவரின் மார்க்கெட்டும் இப்பொழுது உயர்ந்துள்ளது.

ஓ மணப்பெண்ணே
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் மெகா ஹிட்டடித்த பெல்லி சூபுளு என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிவரும் "ஓ மணப்பெண்ணே" திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து முதன்முறையாக நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் அதைத் தொடர்ந்து சிம்பு தேவன் இயக்கி வரும் கசட தபற என்ற அந்தோலஜி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வெறித்தனமாக ஒர்க் கவுட்
இவ்வாறு தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் அப்டேட்டை வாரி வழங்கி வரும் இவர் இப்பொழுது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் கவுட் செய்தவாறு மஸில்சை காட்டிக்கொண்டு, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மாஸான புகைப்படத்தை வெளியிட்டு தான் இனி ஆக்ஷன் அவதாரத்திற்கு மாற உள்ளேன் என சொல்லாமல் சொல்லியிருக்கும் ஹரிஷ் கல்யாணின் இந்த வெறித்தனமான ஜிம் புகைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











