பிரியங்கா சோப்ராவின் காதலன் யார்?
மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ட்விட்டரில் போட்டுள்ள ஒரு தகவலால் அவர் மறுபடியும் காதலில் விழுந்துவிட்டாரோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா படங்கள், விளம்பர படங்கள் என்று ஓடி, ஓடி நடித்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஹாலிவுட் படமான பிளேன்ஸில் இஷானி என்ற கதாபாத்திரத்திற்கு வாய்ஸ் கொடுத்துள்ளார்.
அவர் ராம் சரண் தேஜாவுடன் நடித்துள்ள ஜான்ஜீர் படம் வரும் 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

காதலா?
பிரியங்கா சோப்ரா ட்விட்டரில், ஒரு காலத்தில் ஒரு பையன் இருந்தான்... அவன் ஒரு பெண்ணை காதலித்தான்... வாழ்நாள் முழுவதும் அவளுடன் வாழ விரும்பினான். என்ன அருமையான வார்த்தைகள் என்று தெரிவித்துள்ளார். இதை படித்தால் பிரியங்கா யாரையோ குறிப்பிட்டு சொல்வது போல் உள்ளது. ஒரு வேளை அவர் காதலில் விழுந்துவிட்டாரோ என்று பலர் பேசுகின்றனர்.

ஷாஹித் கபூர்
பிரியங்கா சோப்ராவும், பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தார். அவர்கள் அவ்வப்போது சேர்வதும் பின்னர் சண்டைபோட்டுக் கொண்டு பிரிவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

தற்போதும் ஷாஹிதா?
ஒரு வேளை பிரியங்கா மீண்டும் ஷாஹிதுடன் சேரும் மூடில் இருக்கிறாரோ என்னவோ? அப்படியே சேர்ந்தால் அவர்கள் எத்தனை காலம் ஒன்றாக இருப்பார்கள் என்பது கேள்விக்குறி தான்.

ஷாருக்கான்
பிரியங்காவுக்கும், பாலிவுட் பாதுஷா ஷாருக்கானுக்கும் தொடர்பு இருந்ததாக பாலிவுட்டில் ஒரு காலத்தில் பேச்சாகக் கிடந்தது. இந்த விவகாரத்தால் ஷாருக்கான் வீடு போர்க்களமாக ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











