ஹன்சிகா யாரு கூட தீபாவளி கொண்டாடுறாங்க தெரியுமா?
நம்மில் எல்லோரும் சொந்த பந்தங்களுடன் பண்டிகை கொண்டாட விரும்புவோம். ஆனால் நடிகை ஹன்சிகா இந்த வருட தீபாவளிப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார்.
ஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
தற்போது வரை 30 குழந்தைகளைத் தத்தெடுத்திருக்கும் ஹன்சிகா, அக்குழந்தைகளுக்கான உணவு, தங்கும் இடம், படிப்பு செலவு என எல்லாவற்றையும் அவரே கவனித்து கொள்கிறார்.

சிறப்பு தீபாவளி
இந்நிலையில் இந்த தீபாவளியை தான் தத்தெடுத்த 30 குழந்தைகளுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

புயல் நிவாரணம்
'ஆம்பள' படத்திற்காக ஊட்டியில் இருக்கும் ஹன்சிகா அங்கிருந்து அப்படியே ஹைதராபாத்துக்கு சென்று ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இருக்கிறார்.

மும்பையில் 30 குழந்தைகள்
இதன் பிறகு மும்பை கிளம்பும் அவர் 30 குழந்தைகளுடன் இணைந்து இந்த வருட தீபாவளியை கொண்டாட இருக்கிறார்.

நீ சிரித்தால் தீபாவளி
இந்த ஆண்டு ஹன்சிகாவிற்கு தலைதீபாவளியாக இருக்கும் என்று ஊடகங்கள் எழுதிவந்த நிலையில் ஹன்சிகா நிஜமாகவே இந்த தீபாவளி தான் தத்தெடுத்த குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடுவதன் மூலம் நிஜமாகவே ஸ்பெஷல் தீபாவளியாக்கிவிட்டார் ஹன்சிகா.


Click it and Unblock the Notifications











