விஜய் ஜோடியாக நடிக்கும் படத்தில் இருந்து விலகல்?: ஸ்ருதி ஹாஸன் விளக்கம்
சென்னை: விஜய் படத்தில் இருந்து ஸ்ருதி ஹாஸன் விலகிவிட்டதாக வந்த தகவல் பொய்யானது என்பதை அவரே தெரிவித்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் விஷால் ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாஸன். இந்த படத்தை அடுத்து அவர் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் அவர் ட்விட்டரில் ஒரு கருத்து தெரிவித்திருந்தார்.

மாற்றம்
நிலைமை மாறும். அனைத்தும் காரணத்தோடு தான் நடக்கிறது. நீங்கள் தான் அதை கண்டுபிடிக்க வேண்டும் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார் ஸ்ருதி.

விலகல்
ஸ்ருதியின் ட்வீட்டை பார்த்த பலரும் ரூம் போட்டு யோசித்து அவர் விஜய் படத்தில் இருந்து விலகுவதை தான் இப்படி தெரிவித்துள்ளார் என்ற முடிவுக்கு வந்தனர்.

தத்துவம்
நான் சிம்புதேவன், விஜய் சார் படத்தில் நடிப்பதை நினைத்து மகிழ்ச்சியில் உள்ளேன். எனது பொய்யான தத்துவ ட்வீட்டை பார்த்து எழுந்த கணிப்புகளுக்கு இத்துடன் ஓய்வு கொடுக்கப்படும் என்று நம்புகிறேன் என்று ட்வீட் செய்துள்ளார் ஸ்ருதி.

இல்லை
நான் போட்ட ட்வீட்டை படித்து பார்த்துவிட்டு தவறாக புரிந்து கொள்ளும் முன்பு இதை தெரிந்து கொள்ளுங்கள். நான் ஒப்பந்தமான அனைத்து படங்களிலும் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார் ஸ்ருதி.


Click it and Unblock the Notifications











