ஹேப்பி பர்த்டே செல்ஃபி புள்ள.. பானா காத்தாடி டு சூப்பர் டீலக்ஸ்.. சமந்தாவின் 7 சூப்பர் ஹிட் படங்கள்

சென்னை: நடிகை சமந்தாவின் பிறந்தநாளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெறித்தனமாக டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

Samantha 32nd Birthday Celebration | Lock Down Birthday, ChaySam

தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

தமிழ், தெலுங்கு திரையுலகில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள சமந்தா நடிப்பில் வெளியான 7 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள் குறித்து இங்கே காண்போம்.

பானா காத்தாடி

பானா காத்தாடி

2010ம் ஆண்டு தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரே நேரத்தில் அறிமுகமானார் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா, பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி என பல படங்கள் அந்த ஆண்டில் சமந்தா நடிப்பில் ரிலீசானது. பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவான பானா காத்தாடி படத்தில் நாயகியாக தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் சமந்தா.

நான் ஈ

நான் ஈ

ராஜமெளலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான நான் ஈ படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார் நடிகை சமந்தா. சமந்தாவுக்கு ஜோடியாக நானி நடித்திருந்தாலும், படம் முழுக்க ஈயை காதலிக்கும் பெண்ணாகவும், வில்லன் சுதிப்பிடம் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

நீ தானே என் பொன்வசந்தம்

நீ தானே என் பொன்வசந்தம்

விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு வெர்ஷனில் நாயகியாக நடித்திருந்த சமந்தா, மீண்டும் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவான நீ தானே என் பொன்வசந்தம் படத்தில் பல பரிமாணங்களில் நடித்து அசத்தியிருப்பார். ஸ்கூல், காலேஜ், மேரேஜ் என காதலும், ஈகோ சண்டையும், பிரிவும், மீண்டும் சேர்தல் என அந்த படம் காதலர்களின் ஃபேவரைட் படமாக அமைந்திருந்தது.

தெறி

தெறி

தளபதி விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் என மூன்று மெகா பிளாக்பஸ்டர் படங்களில் நடிகை சமந்தா நடித்துள்ளார். கத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் பிளாஷ்பேக் போர்ஷனில் கொஞ்ச காட்சிகளில் நடித்திருந்தாலும், நடிகை சமந்தாவின் நடிப்பு தெறி படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

24

24

யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான டைம் மெஷின் படமான 24 படத்தில் சமந்தா செம அழகாக நடித்திருப்பார். முன்னதாக 2014ம் ஆண்டு சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் காதல் ரசம் வழிய நடித்திருந்த சமந்தா மீண்டும் இந்த படத்தில் ஜோடி சேர்ந்து கலக்கி இருப்பார்.

இரும்புத்திரை

இரும்புத்திரை

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான விஷாலின் இரும்புத்திரை படத்தில் சைக்காலஜிஸ்ட் மருத்துவராக நடிகை சமந்தா போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ராணுவ வீரரான விஷாலின் கோபத்தை கட்டுப்படுத்த ட்ரீட்மென்ட் கொடுக்கும் சமந்தா, அவர் மீது காதலில் எப்படி விழுகிறார் என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் மித்ரன். அர்ஜுனின் ஹைடெக் ஹேக்கிங் ஆட்டத்திற்கு நடுவே இந்த போர்ஷன் ரசிகர்களை ரிலாக்ஸ் செய்ய வைத்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ்

சமந்தா நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான படம் என்றால் அது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் நடித்த சூப்பர் டீலக்ஸ் தான். So Called தமிழ் பொண்ணு கேரக்டரில் இருந்து முற்றிலும் மாறிய வேம்பு கதாபாத்திரத்தில் சமந்தா துணிச்சலாக நடித்ததை சர்வதேச மீடியாக்களும் பாராட்டின.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X