ஹாட் தமன்னாவுக்கு ஹேப்பி பர்த்டே.. காஜல் அகர்வால், சமந்தா என பிரபலங்கள் வாழ்த்து!
சென்னை: கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி வரும் நடிகை தமன்னாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டு தமன்னா நடிப்பில் ஸ்கெட்ச் என்ற ஒரே ஒரு படம் மட்டுமே வெளியான நிலையில், இந்த ஆண்டு தமன்னாவுக்கு நல்ல ஆண்டாகவே அமைந்துள்ளது.
பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன், சைரா நரசிம்ம ரெட்டி என பல படங்களில் தமன்னா இந்த ஆண்டு கலக்கியுள்ளார்.
தமன்னாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் #HBDTamannaah என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

30 வயசு
1989ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி மும்பையில் பிறந்த தமன்னாவுக்கு இன்றோடு 30 வயசு ஆகிடுச்சு. 2005ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான சாந்த் ஷா ரோஷன் சேரா படத்தில் அறிமுகமான தமன்னா, 2007ம் ஆண்டு தமிழில் வெளியான கேடி படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் தமன்னா நடித்துள்ளார்.
சமந்தா
பிரபல முன்னணி நடிகை சமந்தா, நடிகை தமன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். கடின உழைப்புக்கு சொந்தக்காரியான நீ, நினைத்தது எல்லாம் வெற்றி பெறும் என்றும் சக நடிகையான சமந்தா வாழ்த்தியுள்ளார்.
காஜல் அகர்வால்
சமந்தாவை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வாலும் தமன்னாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமன்னாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அதே காமன் டிபியை காஜலும் பகிர்ந்துள்ளார்.
அஜித் ரசிகர்கள்
வீரம் படத்தில் கோப்பெருந்தேவியாக அஜித்துக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். தமன்னாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அஜித் சார்பில் அவரது ரசிகர்கள் தமன்னாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் ரசிகர்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த சுறா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். தமன்னாவின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
பாகுபலி ரசிகர்கள்
பாகுபலி படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக தமன்னா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பிரபாஸ் ரசிகர்கள் மற்றும் பாகுபலி படத்தின் ரசிகர்கள் தமன்னாவை வாழ்த்தி வருகின்றனர்.
சூர்யா ரசிகர்கள்
சூர்யா, தமன்னா நடித்த அயன் படத்தை சூர்யா ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். அந்த படத்தின் காட்சிகளை பகிர்ந்து நடிகை தமன்னாவிற்கு சூர்யா ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாட்டி தமன்னா
யார் சொன்னா அழகா இருப்பவர்கள் குறும்புத்தனம் பண்ண மாட்டார்கள் என்று, இங்கே பாருங்க தமன்னாவின் குறும்புத்தனங்களை என தமன்னாவின் குறும்புத்தன புகைப்படங்களை தொகுத்து போட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
சைரா லக்ஷ்மி
2019ம் ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்ட படமாக வெளியான சைரா நரசிம்ம ரெட்டி படத்தில், நாட்டியக்கார லக்ஷ்மியாக நடித்து தமன்னா அசத்தியிருப்பார். எதிரிகள் கூடாரத்தில் தற்கொலைப் படையாக மாறி தமன்னா நடித்திருக்கும் காட்சியை பகிர்ந்து இந்த ரசிகர் வாழ்த்தியுள்ளார்.
தமன்னா மாஷ்-அப்
நடிகை தமன்னாவின் 30வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பல மாஷ்-அப் வீடியோக்களை செய்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

நயன்தாரா ரசிகர்கள்
சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் தென்னிந்தியாவின் இரு பெரும் முன்னணி நடிகைகளான தமன்னா மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர். அந்த படத்தின் புகைப்படங்களை பகிர்ந்து நயன்தாரா ரசிகர்களும் தமன்னாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











