தர லோக்கல் தங்கச்சி டு 'பிகில்' சிங்கப்பெண்.. டிரெண்டாகும் #HBDIndhuja.. ரசிகர்கள் வாழ்த்து!

சென்னை: மேயாத மான் படத்தில் வரும் தங்கச்சி கேரக்டர் ஆனாலும், தளபதி விஜய்யின் பிகில் படத்தில் வரும் கால்பந்தாட்ட வீராங்கனை கதாபாத்திரம் ஆகட்டும் பிரிந்து மேய்ந்திருப்பார் நம்ம இந்துஜா.

Recommended Video

Bigil Making Scenes : பிகில் பட செட்டில் நடந்த கூத்து-வீடியோ

வேலூரை சேர்ந்த தமிழ்நாட்டு தங்கம் இந்துஜாவின் 26வது பிறந்தநாள் இன்று கோலிவுட் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

#HBDIndhuja என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி தளபதி ரசிகர்கள் முதல் இந்துஜா ரசிகர்கள் வரை அவரது பிறந்தநாளை வேற லெவலில் செலிபிரேட் செய்து வருகின்றனர்.

செம்ம அழகு

செம்ம அழகு

பாரம்பரிய உடையாக இருக்கட்டும், படு கவர்ச்சியான உடையாக இருக்கட்டும், எல்லாத்துலயும் செம்ம அழகாக நடிகை இந்துஜா கலக்குகிறார். அழகில் மட்டுமின்றி நடிப்பிலும் இந்துஜா வேற லெவல் தான். இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் படத்தில் வைபவுக்கு தங்கையாகவும் இன்னொரு நாயகியாகவும் அசத்தி இருப்பார்.

சிங்கப்பெண்ணே

சிங்கப்பெண்ணே

நடிகை இந்துஜாவின் பிறந்தநாள் ஹாஷ்டேக் இந்தளவுக்கு டிரெண்டாக காரணமே நம்ம தளபதி புள்ளிங்கோ தான். இயக்குநர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய், நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பிகில் திரைப்படத்தில், கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து இருந்த இவரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

காமன் டிபி

காமன் டிபி

முன்னணி நட்சத்திரங்களின் பிறந்தநாளுக்கு காமன் டிபி உருவாக்குவது போல நடிகை இந்துஜாவின் பிறந்தநாளையும் காமன் டிபி எல்லாம் உருவாக்கி ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். திரைத்துறைக்கு வந்த சில நாட்களிலேயே, தனது திறமையான நடிப்பால் அந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ளார் இந்துஜா.

விஜய்யுடன் கேக் கட்டிங்

விஜய்யுடன் கேக் கட்டிங்

இந்த லாக்டவுன் பிறந்தநாளை விட கடந்த ஆண்டு நடிகை இந்துஜா பிறந்தநாளை பிகில் படக்குழுவினருடன் கொண்டாடினார். நடிகர் விஜய், ஏ.ஆர். ரஹ்மான், அட்லி மற்றும் பிகில் அணியின் சிங்கப்பெண்களுடன் வேற லெவலில் நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை தனது வாழ்க்கையில் இந்துஜா எப்போதுமே மறக்க மாட்டார், அதன் புகைப்படங்களையும் ரசிகர்கள் இந்த ஹாஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர்.

ரஜினி ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடிகை இந்துஜா எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு, ரஜினிகாந்த் ரசிகர்களும் இந்த திறமையான நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி, மகாமுனி என பல படங்களில் தனது எக்ஸ்ட்ராடினரியான நடிப்பை இவர் வெளிப்படுத்தி இருப்பார்.

பிரியா பவானி சங்கர் ரசிகர்கள்

பிரியா பவானி சங்கர் ரசிகர்கள்

மேயாத மான் படத்தில் நடிகை பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்திருந்த நிலையில், இந்துஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மூக்குத்தி அம்மன், காக்கி, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் வெளிவர உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X