நடிகை ஹன்சிகா மீதான புகார்... போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

நடிகை ஹன்சிகா ஆகியோர் மீதான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: இயக்குனர் ஜமீல், நடிகை ஹன்சிகா ஆகியோர் மீதான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடிக்கும் படம் மஹா. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காசி நகரின் பிண்ணனியில் காவி உடையணிந்த பெண் துறவியாக இருக்கும் ஹன்சிகா,புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றது.

HC question cop on Hansikas Maha issue

இந்த போஸ்டர், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், பெண் துறவிகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இந்து மக்கள் முன்னணியின் அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் புகார் அளித்திருந்தார். அதில் போஸ்டர் காட்சியை அமைத்த இயக்குனர் ஜமீல் மீதும், அதில் இடம்பெற்றிருந்த நடிகை ஹன்சிகா மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

ஆனால் போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஒரு மாதத்திற்கு மேலாகியும் புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

HC question cop on Hansikas Maha issue

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நாரயணன் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X