அவர்கள் சாபம் உன்னை சும்மா விடாது: எந்த தமிழ் ஹீரோவை சொல்கிறார் ஸ்ரீ ரெட்டி?
சென்னை: சிறு தயாரிப்பாளர்களின் சாபம் உங்களை சும்மா விடாது என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்தில் உள்ள ஒரு பெரிய பிரபலம் ஹீரோயின்கள் உள்பட பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தகாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.
இந்நிலையில் அவர் ஃபேஸ்புக்கில் மேலும் கூறியிருப்பதாவது,

பணம்
அனைத்து தமிழக தயாரிப்பாளர்களும் உங்களை நம்பினார்கள், வாக்களித்தனர். ஆனால் நீங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டுவிட்டீர்கள். நீங்கள் பணத்திற்காக பல தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் அனைவரும் கோபம் அடையாத வரை தான் உங்களுக்கு பாதுகாப்பு.
எம்.எல்.ஏ.
அந்த தயாரிப்பாளர்களுக்கு கோபம் வந்துவிட்டால் உங்களின் எம்.எல்.ஏ. பதவி, ஹீரோ பதவி என அனைத்தும் காணாமல் போய்விடும். எவ்வளவு பணம் தான் உங்களை திருப்தி படுத்தும்? உங்களால் பல சிறு தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சாபம் சும்மா விடாது என்கிறார் ஸ்ரீரெட்டி.

எம்.எல்.ஏ.
தயாரிப்பாளர்களை கொடுமைப்படுத்துகிறார், எம்.எல்.ஏ., ஹீரோ ஆகிய மூன்று விஷயங்களை வைத்து ஸ்ரீ ரெட்டி யாரை பற்றி புகார் தெரிவித்துள்ளார் என்பது மக்களுக்கு புரிந்துவிட்டது. அவரின் ஃபேஸ்புக் பக்கத்திலேயே அந்த நபரின் பெயரை நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

புகார்
கோலிவுட் பிரபலங்கள் மீது முதன் முதலாக பாலியல் புகார் தெரிவித்தவர் ஸ்ரீ ரெட்டி தான். ஆனால் அவரின் புகார்கள் குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ஸ்ரீ ரெட்டியும் அது பற்றி எல்லாம் கவலைப்படாமல் பட வாய்ப்புகள் வருவதை பார்த்து மகிழ்ச்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











