3வது கணவருடன் ஹனிமூனுக்கு சென்ற நடிகை.. மேலாடையில்லாமல் கடலில் எப்படி குளிக்கிறாரு பாருங்க!
லாஸ் ஏஞ்சல்ஸ்: 52 வயதில் 3வது கணவருடன் ஹனிமூனுக்கு சென்ற பிரபல ஹாலிவுட் நடிகை ஹெய்டி க்ளம் கடலில் மேலாடையின்றி நீந்தி குளிக்கும் வீடியோவை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ஒட்டுமொத்த இணையத்தையும் சூடாக்கியுள்ளார்.
செக்ஸ் அண்ட் தி சிட்டி, புராஜெக்ட் ரன் வே, கர்ஸ்ட், ப்ளோ ட்ரை, ஜூலேண்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான இவர், ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களையும் நடத்தி வருகிறார். ஜெர்மனிஸ் நெக்ஸ்ட் டாப் மாடல், அமெரிக்கா காட் டேலன்ட் போன்ற பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் செயல்பட்டு உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளார்.

ஜெர்மனியில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவின் சிட்டிசன்ஷிப்பையும் பெற்றுள்ள இவர் தனது 3வது கணவரான இசையமைப்பாளர் டாம் காலிட்ஸ் உடன் ஹனிமூன் சென்றுள்ள புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
2 முறை விவாகரத்து: கோலிவுட்டிலேயே வனிதா விஜயகுமார் எல்லாம் 3 திருமணங்கள் செய்யும் போது, ஹாலிவுட்டில் இதெல்லாம் சர்வ சாதாரணம்ப்பா என்பது போல ஏகப்பட்ட முன்னணி நடிகைகள் 3 திருமணங்கள் செய்துள்ளனர். சிலர், 4 திருமணங்களையும் வெற்றிகரமாக கடந்துள்ளனர். விக்டோரியாவின் பிகினி சூப்பர் மாடலான ஹெய்டி க்ளம் 1997ம் ஆண்டு ரிக் பிபினோ என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். 2002ம் ஆண்டு அவருடன் இனிமேல் வாழ முடியாது என்கிற முடிவுக்கு வந்து பிரிந்தார். அதன் பின்னர், சீல் ஹென்ரி சாமுவேலை 2005ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2014ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
3வது திருமணமும் ஹனிமூனும்: கடந்த 2019ம் ஆண்டே இசையமைப்பாளர் டாம் காலிட்ஸை திருமணம் செய்துக் கொண்ட ஹெய்டி க்ளம் 6 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ஹனிமூன் மோகத்தில் இருந்து மீளவில்லை என்றே தெரிகிறது. சமீபத்தில், கடற்கரை தீவு ஒன்றுக்கு இருவரும் சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளனர்.
டாப்லெஸ் குளியல்: விக்டோரியா சீக்ரெட் சூப்பர் மாடலான ஹெய்டி க்ளம் தனது 52வது வயதிலும் ஜெனிஃபர் லோபஸ் போஸ் கட்டழகியாகவே வலம் வருகிறார். இந்நிலையில், கடலில் இறங்கி குளிக்கும் போது மேலாடை அணியாமல் அவர் வெறும் சிங்கிள் பீஸை மட்டுமே அணிந்துக் கொண்டு குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளியுள்ளார்.


Click it and Unblock the Notifications











