காணவில்லை போஸ்டர் அடித்த பிறகு ஒரு வழியாக தொகுதிக்கு வந்த நடிகை ஹேமமாலினி
மதுரா: காணவில்லை என்று மதுரா தொகுதியில் போஸ்டர் அடிக்கும் அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்திய பாஜகவின் நடிகை ஹேமமாலினி, ஒரு வழியாக தனது தொகுதிக்கு விசிட் அடித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் நடிகை ஹேமமாலினி உத்தர பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பிறகு அவர் ஒரேயொரு முறை மட்டும் தான் மதுராவுக்கு சென்றார்.
இதனால் கடுப்பான மக்கள் ஹேமமாலினியை காணவில்லை என்று போஸ்டர் அடித்து ஒட்டினர்.

பட்ஜெட்
தொகுதிக்கு தான் செல்லவில்லை என்று பார்த்தால் ஹேமாவை பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் நாடாளுமன்றத்திலும் ஹேமமாலினியை பார்க்க முடியவில்லை.

அமெரிக்கா
ஹேமமாலினி பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாமல் அமெரிக்காவில் டான்ஸ் நிகழ்ச்சிகள் நடத்த சென்றுவிட்டார். இது குறித்து அவர் பாஜக தலைமையிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தாராம்.

டூர்
டான்ஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஊர் திரும்பிய ஹேமமாலினி ஒரு வழியாக தொகுதி பக்கம் சென்றுள்ளார். அவர் மதுராவில் உள்ள கட்சி தொண்டர்களை சந்தித்து பேசினார்.

விவசாயி
ஹேமா கட்சியினருடன் பேசியதை பார்த்த விவசாயி ஒருவர் கூறுகையில், வாக்கு கேட்டு எங்களிடம் வருவீர்கள், நாங்களும் உங்களுக்கு பொறுப்பை தருவோம். ஆனால் தற்போது உங்களுக்கு எங்களை சந்தித்து பேசக் கூட தோன்றவில்லையா? என்றார்.

இப்போ தானே
அதற்கு, இப்போது தானே மதுராவில் என் பயணம் துவங்கியுள்ளது. அதற்குள் பொறுமையை இழந்தால் எப்படி என்று பதிலளித்தார் ஹேமமாலினி.


Click it and Unblock the Notifications











