கற்றது தமிழ் அஞ்சலி பிறந்தநாள்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்
சென்னை: நடிகை அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். இடையில் சில தனிப்பட்ட காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படம் விரைவில் வெளியாகவிருக்கும் சூழலில் அஞ்சலி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அஞ்சலி. ராம் இயக்கி ஜீவா நடித்திருந்த அந்தப் படம் கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டு வருகிறது. படம் மட்டுமின்றி அதில் நடித்த அஞ்சலிக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை ஒரு சிறந்த நடிகையாக அடையாளப்படுத்திக்கொண்டார்.

முன்னணி நடிகை: இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் ஏராளம் வர ஆரம்பித்தன. அதன்படி அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார். அழகு மட்டுமின்றி திறமையான வெகு சில நடிகைகளில் ஒருவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார் அவர்.
காணாமல் போன அஞ்சலி: ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவமான நடிப்பை காண்பித்து ரசிகர்களை கவர்ந்த அவரை சுற்றி சில சர்ச்சைகளும் எழுந்தன. இதன் காரணமாக திரையுலகிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்கு பின் சிங்கம் 2 படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி; அதனையடுத்து ஜெயம் ரவியுடன் சலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருந்தாலும் பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை.
மீண்டும் கவனம்: இந்த சூழலில் மீண்டும் அவர் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ஃபால் என்ற வெப் சீரிஸில் நடித்த அவர் தெலுங்கிலும் ஒரு வெப் சீரிஸில் நடித்தார். மேலும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். தமிழில் தற்போது ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் நடித்திருக்கிறார். கற்றது தமிழ் எப்படி அஞ்சலிக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்ததோ அதேபோல் இந்தப் படமும் பெரும் அடையாளமாக மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.
படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகளும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. முக்கியமாக அஞ்சலி பார்த்த ரசிகர்கள் அவரின் ரீ என்ட்ரி தரமாக இருக்கும் என்பதை இந்த க்ளிம்ப்ஸும், அஞ்சலியின் அழகும் உணர்த்துவதாக தெரிவித்தனர். அதேபோல் சமீபத்தில்தான் அவரது நடிப்பில் கேங்ஸ் ஆஃப் கோதாவரி படம் வெளியானது. ஆனால் படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலி சொத்து மதிப்பு: இந்நிலையில் அவர் இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் வரை சொத்து இருக்கிறதாம். பிஎம்டபிள்யூ கார் வைத்திருக்கும் அவர், தான் சம்பாதிக்கும் பணத்தை தொழிலிலும் முதலீடு செய்திருப்பதாகவும்; அதன்மூலமாக வருமான ஒரு பக்கம் வருகிறதென்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











